'கயல்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் அறிமுகமாகி பிரபலமான நடிகர் வின்சென்ட் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அந்தோணி' எனும் திரைப்படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான டி. இமான் மற்றும் முத்திரை பதித்த இயக்குநர்களான சீனு ராமசாமி மற்றும் லெனின் பாரதி ஆகியோர் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு படக்குழுவின்ருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்து ராஜா - ஜெனோசன் ராஜேஷ்வர் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள 'அந்தோணி 'எனும் திரைப்படத்தில் வின்சென்ட் , டி. ஜே. பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன். ஆர் , சௌமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். உணர்வுபூர்வமான படமாக தயாராகி இருக்கும் இதனை ஓசை பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கலை வளரி சகா - ஆர் . ரமணதாஸ் & சுகந்தினி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
தமிழ்- மலையாளம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் தயாராகி, விரைவில் படமாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்ட வரும் இப்படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகனும், நாயகியும் அர்த்தமுள்ள பார்வையுடன் தோன்றுவது .. படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM