டில்வின் இந்தியா சென்றுள்ளதால் விரைவில் மாகாணசபைத் தேர்தலை எதிர்பார்க்கலாம் - ஹரின் பெர்னாண்டோ

09 Feb, 2026 | 03:03 PM
image

(எம்.மனோசித்ரா)

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா சென்றுள்ளது. இந்தியா நிச்சயம் டில்வினிடம் மாகாணசபைத் தேர்தல் குறித்து வலியுறுத்தியிருக்கும். இந்நிலையில் தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இந்தியா செல்லவுள்ளார். எனவே வெகுவிரைவில் மாகாணசபைத் தேர்தலை எதிர்பார்க்கலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பதுளையில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை (08) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எமது ஆட்சி காலங்களில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாகவே தற்போதைய ஆட்சியாளர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர். கள்வர்கள் எனக் கூறப்படும் எமது ஆட்சியில் தான் சுமார் 7 சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. எமது அரசாங்கத்தில் சட்டம் இயற்றப்பட்டிருக்காவிட்டால் இன்று இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் எவரையும் கைது செய்திருக்கவோ சட்ட நடவடிக்கை எடுத்திருக்கவோ முடியாது.

ரணில் விக்கிரமசிங்க அமைத்துக் கொடுத்த பாதையில் தான் இவர்கள் சிரமமின்றி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். 2022இல் 12 மணித்தியாலங்கள் நாட்டில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அந்த கால கட்டத்தில் நாட்டைப் பொறுப்பேற்று அதனை நாம் கட்டியெழுப்பியதை மக்கள் மறந்து விட்டனர். அதன் விளைவாக இன்று யாரென்றே தெரியாதவர்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இனி இந்த நாடு கடவுளின் பொறுப்பாக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலத்தை எவராலும் தீர்மானிக்க முடியாது. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அனைத்துக்கும் பதில் கிடைத்து விடும். எவ்வாறிருப்பினும் இவ்வாண்டு தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு ஏற்படும். ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா சென்றுள்ளது. அதற்கமைய இந்தியா நிச்சயம் டில்வினிடம் மாகாணசபைத் தேர்தல் குறித்து வலியுறுத்தியிருக்கும்.

இந்நிலையில் தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இந்தியா செல்லவுள்ளார். அதற்கமைய மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் நாட்டின் உண்மையான நிலைவரம் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும். சகல எதிர்க்கட்சிகளையும் இணைப்பதில் ஐக்கிய தேசிய கட்சியே ஒரு பாலமாகத் திகழ்கின்றது. அதற்கமைய ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாம் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தைகள் பிரதிதலைவர் ருவான் விஜேவர்தன உள்ளிட்டவர்களால் பிரத்தியேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏனைய கட்சிகளுடன் நான் உட்பட வேறு குழுக்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். எதிர்காலத்தில் வெற்றிகரமான பலமான எதிர்க்கட்சியொன்றை நாம் உருவாக்குவதை யாராலும் தடுக்க முடியாது. எனினும் நாம் ஐக்கிய மக்கள் சக்தியுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளுக்கே முன்னுரிமையளிக்கின்றோம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத்...

2026-04-12 14:32:14
news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38
news-image

புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-12 11:42:41
news-image

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : ஒரே...

2026-04-12 11:29:19
news-image

நிலக்கரி தொடர்பான மேலதிக செலவுகளை நுகர்வோரிடமிருந்து...

2026-04-12 11:47:49
news-image

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு...

2026-04-12 10:44:49
news-image

விமான நிலையத்தில் அலங்கார செடிகள் கைப்பற்றல்:...

2026-04-12 10:40:56
news-image

புத்தாண்டு காலத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து...

2026-04-12 11:41:49