பிரித்தானியாவிற்கான இலங்கையிலுள்ள உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி மெரில் விக்கிரமசிங்கவை நேற்று வடமத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

ஜேம்ஸ் டவுரிஸ் மன்னார் பகுதிக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போதே வடமத்திய கடற்படையின் கட்டளைத் தளபதியை சந்தித்தார்.

கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி ரியல் அட்மிரல் விக்கிரமசிங்க உயர்ஸ்தானிகரை கௌரவப்படுத்தி வரவேற்றுள்ளார்.

இவர்களுக்கிடையில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன் இரு தரப்பினரும் நினைவுச்சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர்.