(எம்.எப்.எம்.பஸீர்)

பீகொக் மாளிகையில் மணலினால் நிரப்ப்ட்டுள்ள நீச்சல் தடாகத்தில் தங்கம் உள்ளதா என்பது குறித்து எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் தமக்கு அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த நீச்சல் தடாகத்தில் தங்கம் மறைத்து வைக்கப்ப்ட்டுள்ளதாக பரப்ப்ட்டு வரும் கதைகள் உண்மையா இல்லையா என்பதை கண்டறியவும் அது தொடர்பில் ஏ.எஸ்.பி.லியனகே பொலிஸ் மா அதிபரிடம் முன் வைத்த முறைப்பாட்டுக்கும் அமைவாக இந்த உத்தரவினை பொலிஸ் மா அதிபர் பிறப்பித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் மேற்பார்வையில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.