மக்கள் செல்வன் என்ற பட்டத்திற்கு ஏற்றாற்போல் பொது வெளியில் இல்லாமல் திரையுலகிலும் எளிமையாக நடந்து கொள்கிறார் விஜய் சேதுபதி.

பெரிய வெற்றிப்படங்களை தருவதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு கைக்கொடுத்து... குரல் கொடுத்து உதவியிருக்கிறார் விஜய் சேதுபதி. உதயநிதி ஸ்டாலின் மஞ்சிமா மோகன் இணைந்து நடிக்கும் இப்படை வெல்லும் என்ற படத்தில் ஒரு முக்கியமான கேரக்டருக்கு வாய்ஸ் ஓவர் எனப்படும் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்தின் இயக்குநர் கௌரவ் மற்றும் உதயநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த உதவியை செய்திருக்கிறாராம் மக்கள் செல்வன்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை ஸ்ரேயா  நடிப்பில் உருவான அண்டாவக் காணோம் என்ற படத்திலும் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்