இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

07 Feb, 2026 | 05:23 PM
image

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி கொழும்பு வளாகத்தினுள் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ வித்தக விநாயகர் திருக்கோவில், புனரமைக்கப்பட்டு அதன் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (08) வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு இன்றைய தினம் விசுவாவசு வருஷம் தை மாதம் 24ம் நாள் சனிக்கிழமை (07) ,  காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகிய யாகபூஜை விஷேட திரவ்ய ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையைத் தொடர்ந்து  காலை முதல் மாலை வரை பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தி தமது வழிபாடுகளை மேற்கொண்டனர்.

தொடர்ந்தும் கிரியை நிகழ்வுகளான ஆலய சுத்தி, பிம்ப சுத்தி ரஷாபந்தனம், பூர்வசந்தானம், யாகபூஜை ஹோமம், ஸ்பரிசாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, ஆச்சார்யபூஜனம் ஆகியவை நடைபெற்றது. 

மேலும், வெள்ளிக்கிழமை (06) இந்த மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிரியாகால நிகழ்வுகள் காலை கணபதி ஹோமம் மற்றும் நவகிரஹ ஹோமத்துடன் ஆரம்பமாகி,  மாலை வாஸ்து சாந்தி மற்றும் அங்குரார்ப்பணச் சடங்குகளோடு நடைபெற்றதோடு விசேட நிகழ்வாக 

திருக்கயிலாய பரம்பரை, தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சந்நிதானம் ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ கயிலை  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் விசேட வருகையும் அவர்தம் திருக்கரங்களால் கலச பூஜை மற்றும் ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய மூலஸ்தான கலசம் வைக்கும் நிகழ்வும் சுவாமிகளின் அருளாசியுடன் இனிதே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

நாளைய தினம் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் தினமும் காலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறவுள்ளதோடு, எதிர்வரும் மார்ச் மாதம் 28-ஆம் திகதி சனிக்கிழமை அன்று மண்டலாபிஷேகப் பூர்த்தி விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்தத் திருக்குடமுழுக்கு விழாவினை இந்துக் கல்லூரி கொழும்பின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதோடு, இந்த உன்னதமான ஆன்மீக நிகழ்வில் அனைத்து அடியார்களையும் கலந்துகொண்டு வித்தக விநாயகரின் அருளைப் பெறுமாறு கல்லூரி விழாக்குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டாக்டர் அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையில்...

2026-03-12 18:16:04
news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10
news-image

சுனந்தாஜியின் பகவத்கீதை ஆங்கில விளக்க சொற்பொழிவின்...

2026-03-11 19:30:42
news-image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச...

2026-03-11 19:35:06
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலக்கிய களம்...

2026-03-11 11:03:56
news-image

தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் நிகழ்வு

2026-03-10 13:00:34
news-image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன்...

2026-03-10 04:54:36
news-image

“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

2026-03-09 15:23:33
news-image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நகரசபை...

2026-03-09 15:16:35
news-image

சுனந்தாஜி பங்கேற்பில் பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்வு 

2026-03-09 11:46:19
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர்...

2026-03-08 17:36:45
news-image

கொழும்பில் நடைபெற்ற 'வீரவனிதையர் விருது விழா':...

2026-03-08 15:24:09