சுப்பீரியர் வேனா காவா சிண்ட்ரோம் எனும் இதய நரம்பியல் பாதிப்பிற்குரிய நவீன சத்திர சிகிச்சை

07 Feb, 2026 | 03:10 PM
image

எம்மில் சிலருக்கு மார்பு பகுதியில் கட்டி அல்லது ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டு, நரம்பு மண்டலத்தை அழுத்துவதால் முகம் ,கழுத்து, கை ஆகிய பகுதிகளில் வீக்கமும், மூச்சுத்திணறல், இருமல், தலைவலி ஆகிய கடுமையான பாதிப்பும் ஏற்படும்.

இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சையை வழங்குவர். மேலும் இத்தகைய பாதிப்பின் போது நோயாளிக்கு நிவாரணம் அளிப்பதற்காக தற்போது ட்ரான்ஸ்லம்பர் டன்னல்டு கத்தீட்டர் எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் சிகிச்சையை மேற்கொள்கிறார்கள்.

எம்மில் பலருக்கு மார்பு பகுதியில் மேல் புறத்தில் உள்ள முக்கிய நரம்புகளில் ஏற்படும் அடைப்பு பாதிப்பின் காரணமாக முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் வீக்கமும், மூச்சு திணறல் போன்ற உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அறிகுறியும் உண்டாகும்.

மார்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் கட்டி அல்லது ரத்த உறைவு நரம்பை சேதப்படுத்துவதாலும், நரம்பை அழுத்துவதாலும் பாதிப்பு தீவிரம் அடைகின்றன.

இத்தகைய தருணங்களில் கழுத்து அல்லது மார்பு பகுதியில் உள்ள நரம்புகளை பாவிக்க இயலாத நோயாளிகளுக்கு குறிப்பாக முதியோர்களுக்கு முதுகு தண்டுவடம் வழியாக கீழ் நரம்பு மண்டலம் மூலம் டயாலிசிஸ் குழாயை பொருத்தும் ஒரு சிறப்பு சத்திர சிகிச்சை தான் இந்த ட்ரான்ஸ்லம்பர் டன்னல்டு கத்தீட்டர் சிகிச்சையாகும்.

மூன்று வெவ்வேறு நிலைகளில் இயங்கும் நரம்புகள் செயலிழந்த நிலையில்.. இத்தகைய சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. அல்ட்ரா சவுண்ட் + கணினி உதவியுடன் கதிரியக்க நிபுணர்களால் இத்தகைய சத்திர சிகிச்சை மேம்பட்ட மருத்துவத் தொழில் நுட்பங்களுடன் மேற்கொள்ளப்பட்டு, நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும் சிலருக்கு நாட்பட்ட நரம்பு அடைப்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு இத்தகைய நவீன சத்திர சிகிச்சை சிறந்த பயனுள்ள நிவாரண சிகிச்சையாகும்.

வைத்தியர் ராஜேந்திரன் - தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூச்சுத் திணறல் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-03-12 17:30:56
news-image

தொண்டை புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-03-11 14:44:38
news-image

இலங்கைச் சுகாதாரத் துறையின் எதிர்காலம்: தனியார்...

2026-03-10 15:46:44
news-image

மௌத் அல்சர் எனும் வாய் புண்...

2026-03-10 15:00:58
news-image

எபிகாஸ்ட்ரிக் வலிக்கான நவீன சிகிச்சை

2026-03-09 14:14:08
news-image

பித்தப்பை கொழுப்பு கட்டி பாதிப்பிற்கான சிகிச்சை

2026-03-07 17:08:25
news-image

மீண்டும் மீண்டும் ஏற்படும் அரிதான மூளை...

2026-03-06 15:47:00
news-image

பைலெக்டாசிஸ் எனும் சிறுநீரக பாதிப்பிற்கான சிகிச்சை

2026-03-05 15:39:37
news-image

ஓகுலோபிளாஸ்ரி எனும் கண் பாதிப்பிற்கு நிவாரணம்...

2026-03-04 18:37:34
news-image

பிரியாணியை யார் பசியாற கூடாது..?

2026-03-03 17:16:32
news-image

உயிருக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் கால் பகுதியில்...

2026-03-02 15:01:52
news-image

பெருங்குடல் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் ஹெமிகோலெக்டோமி...

2026-02-28 18:01:58