சின்னத்திரை பிரபலமான நடிகை ரட்சிதா மகாலட்சுமி கதையின் நாயகியாக நடித்திருக்கும் '99/ 66 ' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'யாரு பிள்ளையாரு 'எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் எம். எஸ். மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ' 99 /66 ' எனும் திரைப்படத்தில் ரட்சிதா மகாலட்சுமி, ரோஹிந்த், கோதண்டன் , முல்லை தனசேகரன், ஜாவா சுந்தரேசன், எம். ரவீந்திரன் உள்ளிட்ட பலர் நடைபெறுகிறார்கள்.
சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநரும் , தயாரிப்பாளருமான எம் எஸ் மூர்த்தி இசையமைத்திருக்கிறார்.
ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நடிகர் எம். எஸ். மூர்த்தி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'வெற்றிக்கு வித்திடும் வல்ல வலம்புரி ஏக தந்த நாயகப்பெருமானே..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
துள்ளலிசை பாணியில் தயாரான இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குநர் ஸ்ரீதர் நடனம் அமைத்து, நடனமாடி இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM