கொழும்பு பல்கலைக்கழக லியோ கழகம், பெண்கள் திறன் மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்ட தனது அபிமானி திட்டத்தின் முதல் கட்டமான “சுவர்யா” எனும் முயற்சியை ஜனவரி 30 ஆம் திகதி வட்டவளை தமிழ்மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடாத்தியது.
பெண்கள் மற்றும் சிறுமிகள் முகங்கொடுக்கும் முக்கியமான சவால்களை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட அபிமானி திட்டம், விழிப்புணர்வு ஏற்படுத்தல், கல்வி வழங்கல் மற்றும் அத்தியாவசிய வளங்களுக்கான அணுகலை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் முதலாவது கட்டமாக, பாடசாலை மாணவிகளிடையே மாதவிடாய் சுகாதாரம் மற்றும் அதன் அனுகல் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதையே பிரதான இலக்காகக் கொண்டது.
நிகழ்ச்சியின் போது, கழகத்தினூடாக மாணவிகளுக்குச் சுகாதார துடைப்பாணிகள் (ளயnவையசல nயிமiளெ) மற்றும் மாதவிடாய் கழிவுகளைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் அகற்றுவதற்கான கழிவுப்பெட்டிகளும் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பாடசாலை மாணவிகளுக்காக சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு அமர்வும் நடாத்தப்பட்டது. இவ் அமர்வில், மாதவிடாய் தொடர்பான ஆரோக்கியம், தனிநபர் சுகாதாரம் மற்றும் பொதுவாக நிலவும் தவறான நம்பிக்கைகள் குறித்து தெளிவான விளக்கங்களும் அறிவும் பகிரப்பட்டது.
இந்த சமூக சேவை முயற்சியில் 35இற்கும் மேற்பட்ட லியோ கழக உறுப்பினர்கள் பங்கேற்று, தன்னார்த்துடன் தங்களின் வலுவான தலைமைத்துவம், குழுச் செயற்பாடு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தினர். இதன் மூலம், வட்டவளை பகுதியில் வாழும் மாணவிகளிடையே தன்னம்பிக்கை, மற்றும் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்தி, பாதுகாப்பான மற்றும் ஊக்கமளிக்கும் பாடசாலைச் சூழலை உருவாக்கும் வகையில் ஓர் அர்த்தமிக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
“சுவர்யா” திட்டத்தின் வெற்றிகரமான இந் நிகழ்வு, அபிமானி திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இதன் மூலம் பெண்களின் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதிலும், சமூகங்களில் நிலையான மற்றும் பயனுள்ள மாற்றங்களை உருவாக்குவதிலும் கொழும்பு பல்கலைக்கழக லியோ கழகம் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM