கொழும்பு - மொரட்டுவை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோனையில் போதைப்பொருள் பயன்படுத்திய பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட 8 பேர் நேற்று வியாழக்கிழமை (5) கண்டறியப்பட்டுள்ளனர்.
மொரட்டுவை பஸ் தரிப்பிடத்திலிருந்து புறப்படும் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பரிசோனையின் போதே இந்த 8 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 250 பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட 8 பேரில் ஐவர் கஞ்சா போதைப்பொருளும், இருவர் ஹெரோயின் போதைப்பொருளும், ஒருவர் ஐஸ் போதைப்பொருளும், மற்றுமொருவர் ஐஸ், ஹெரோயின் உள்ளிட்ட இரண்டு போதைப்பொருட்களையும் பயன்படுத்தியுள்ளதாக பரிசோனையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு போதைப்பொருள் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM