நாடு திரும்பினார்  ஜகத் ஜயசூரிய : பதவிக் காலம் முடிந்தது என்கிறது வெளிவிவகார அமைச்சு

Published By: Priyatharshan

31 Aug, 2017 | 09:47 AM
image

பிரேசில், கொலம்பியா, ஆர்ஜென்டீனா, பேரு, சிலி, சூரினாம் ஆகிய  லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான இலங்கை தூதுவரான முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப் படைகளின் பிரதானியுமான ஜெனரால் ஜகத் ஜயசூரிய பிரேசிலில் இருந்து வெளியேறியுள்ளார்.

நேற்று முன் தினம் அவர் டுபாய் ஊடாக இலங்கை வரும் நோக்குடன் பிரேசிலில் இருந்து டுபாய்க்கு சென்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்தன. நேற்று அவர் இலங்கையை வந்தடைய தீர்மானிக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகின்றது.

2009 ம் ஆண்டு நிறைவடைந்த இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும்  வைத்தியசாலைகள் மீதான தொடர் தககுதல்கள், கற்பழிப்புக்கள், வலுக்கட்டாய காணாமல் ஆக்குதல்கள், இனப் படுகொலை உள்ளிட்ட யுத்தக்குற்றங்களில் அவர் ஈடுபட்டதாக தெரிவித்து, தென் அமெரிக்காவின் மனித உரிமைகள் அமைப்புகளால் கடந்த திங்கட்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ஆர்ஜன்டீனா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகளிலும் எதிர்வரும் தினங்களில் வழக்குத் தொடரவிருப்பதாக, அது தொப்டர்பில் செயற்படும்  சட்டத்தரணி கார்லோஸ் கெஸ்டரீனா பெர்ணாண்டெஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சூரினாம் அதிகாரிகள் தங்களது மனுவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையிலேயே வழக்குத் தாக்கலை அடுத்தே ஜகத் ஜெயசூரிய பிரேசிலில் இருந்து வெளியேறியதாக  தகவல்கள் தெரிவித்தன.

எனினும் இதனை மறுத்துள்ள வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்னே, தமது இரண்டு வருட பதவிக் காலம் நிறைவடைந்த நிலையிலேயே அவர் நாடு திரும்பியதாக அறிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் பிரேசிலில் இருந்து வெளியேறியதாகவும், நேற்று கொழும்பை அவர் வந்தடைய இருந்தார் என்றும் அவர் சுட்டிக்கடடியுள்ளார்.

இதேவேளை, பிரேசில் நீதிமன்றத்தில் யுத்தக்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பான ஆவணங்கள், இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் வெளிவிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு அமையவே, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸிலில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறித்து  அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக தனிப் பொறுப்பு போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31