2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திக­தி­யுடன் முடி­வ­டைந்த இரண்டாம் காலாண்டில் Lanka IOC PLC க்கு 135மில்­லியன் ரூபா நட்டம் ஏற்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பெற்றோல், டீசல் எண்ணெய் விற்­ப­னையில் இந்த நட்டம் ஏற்பட்­ட­தாக நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. தற்­போது பெற்­றோ­லிய கம்­ப­னிகள் ஒரு லீற்றர் பெற்றோலில் 14 ரூபாவும் ஒரு லீற்றர் டீசலில் 8 ரூபாவும் நட்­ட­ம­டை­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

அந்த வகையில் பெற்­றோ­லிலும் டீச­லிலும் வரு­மானம் இன்­மையால் LIOC நிறு­வனம் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்த முதல் காலாண்டில் 652 மில்­லியன் ரூபா நட்­டத்தை பதிவு செய்­துள்­ளது. கொள்­வி­லை­யிலும் பார்க்க குறைந்த விலையில் பெற்­றோ­லையும் டீச­லையும் விற்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

சந்­தையில் விற்­பனை செய்­யப்­படும் ஒவ்­வொரு மேல­திக லீற்றர் பெற்­றோ­லிலும் டீச­லிலும் நட்­டத்தை அடை­கின்ற போதிலும் கம்­பனி தொடர்ந்து இந்த மோட்டார் வாகன எரி­பொ­ருட்­களை விற்­பனை செய்து வரு­கி­றது. வேலை­நி­றுத்த காலங்­க­ளிலும் உயர் விற்­ப­னையில் அதிக நட்டம் ஏற்­படும் போதிலும் கம்­பனி தொடர்ந்து பெரு­ம­ளவு  பெற்­றோ­லையும் டீச­லையும் விற்­பனை செய்­வது குறிப்­பி­டத்­தக்­கது. கூடுதல் தொகை விற்­பனை கூடுதல் நட்­டத்­தையே ஏற்­ப­டுத்­து­வ­தாக அறி­வித்­துள்­ளது. 

2017ஆம் ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாத காலப்­ப­கு­தியில் சுமார் 6,200 மில்­லியன் இலங்கை ரூபாவை அர­சாங்க திறை­சே­ரிக்கு LIOC வழங்­கி­யுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். இந்த தொகை மொத்த விற்­பனை வரு­மா­னத்தில்  1/3 பங்­காகும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தற்­போ­தைய மோட்­டார்­வா­கன எரி­பொ­ருட்­களின் சந்தை விலைகள் இறு­தி­யாக 2015ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் மாற்றம் செய்­யப்­பட்­டன. அந்த விலை­களே தற்­போதும் நாட்டில் அமுலில் உள்­ளன. 

மசகு எண்ணெய் விலைகள் 2005ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்தில் இருந்து இன்று வரை  பீப்பா ஒன்று 30 டொல­ரி­லி­ருந்து 60 டொலர் வரை­யாக இருந்து  வரு­கி­றது. ஆனால் விற்­பனை விலையில் எது­வித மாற்­றமும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 

மேலும், இக்­கா­லப்­ப­கு­தியில் வரிகள் மேலும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் சில்­லறை விற்­பனை விலைகள் அதி­க­ரிக்­கப்­ப­ட­வில்லை. எல்­லா­வற்­றுக்கும் மேலாக, இலங்கை ரூபாவின் பெறு­மதி அநே­க­மாக 18 சத­வீ­தத்­தினால் வீழ்ச்சி அடைந்­ததால் எண்ணெய் கம்­ப­னிகள் நாண­ய­மாற்று இழப்­பையும் ஏற்றுக் கொள்ள வேண்டி உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

உரிய முறை­யி­லான ஒரு விலைத் திட்­டத்தை நாட்டில் அமுல் செய்­வது குறித்து LIOC  அர­சாங்­கத்தின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­துள்­ளது. இந்த முக்­கிய எரி­சக்தித் துறை சீராக்கல் அரசாங்கத்திற்கும் எண்ணெய் கம்பனிகளுக்கும் மட்டுமன்றி இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அனுகூலம் அளிப்பதால் இதற்கு முன்னுரிமை அளிக்குமாறு இப்பொழுது சர்வதேச நாணய சபையும் அரசாங்கத்திடம் கோரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.