மன அழுத்தத்தை குறைக்கும் நவீன சிகிச்சை

05 Feb, 2026 | 03:27 PM
image

இன்றைய திகதியில் பாடசாலையில் பயிலும் மாணவ மாணவிகள் முதல் வீட்டில் ஓய்வாக இருக்கும் மூத்த உறுப்பினர்கள் வரை நாளாந்தம் தவறாது உச்சரிக்கும் சொல்லாடல் 'நாங்கள் ஸ்ட்ரெஸ் ஆக இருக்கிறோம்' என்பதுதான். இந்த ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம்- மன உளைச்சல்- மன இறுக்கம் - என மனம் சார்ந்த குறைபாடு ஏற்படுவதால் உண்டாகிறது.

இத்தகைய மன அழுத்த பாதிப்பில் இருந்து விலகுவதற்காக தற்போது அடல்ட் கலரிங் தெரபி எனும் நவீன சிகிச்சை அறிமுகமாகி, வரவேற்பை பெற்று வருவதாக உளவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

பாடசாலையில் பயில்வதற்கு முன் மூன்று அல்லது நான்கு வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு பொழுது போக்குவதற்காகவும், அவர்களுடைய சிந்தனை ஆற்றலை ஒருமுகப்படுத்துவதற்காகவும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வண்ணங்கள் தீட்டும் புத்தகத்தை வழங்குவர்.

இது அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கருவியாக செயல்படுகிறது. இந்நிலையில் தற்போது செல்போன், கணினி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களின் பாவனை என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.

மேலும் இத்தகைய டிஜிட்டல் திரையினை தொடர்ச்சியாக காண்பதற்கான சூழலும் இருப்பதால் கவன சிதறல் , நினைவுத்திறன் பாதிப்பு , ஹோர்மோன் சுரப்பில் சம சீரற்ற நிலை ஆகியவை ஏற்படுகிறது. அத்துடன் ஆரோக்கியமான மன செயல்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கிறது.  இதனால் மனதளவில் பாதிக்கப்படுபவர்களுக்கும், அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் , மன அழுத்தங்களில் இருந்து திசை திருப்புவதற்காகவும் அடல்ட் கலரிங் தெரபி எனும் சிகிச்சை வழங்கப்படுகிறது.

இத்தகைய சிகிச்சையின் போது வைத்திய நிபுணரால் வழங்கப்படும் அச்சிடப்பட்ட வடிவங்களுக்கு பிடித்த வகையில் வண்ணம் திட்டுவதுடன் நுட்பமாக கவனித்து வண்ணம் தீட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் இத்தகைய பணியில் ஈடுபட்டிருக்கும் போது மனமானது ஒரு முகமான கவனத்தை உண்டாக்கி, அந்த செயலை சிறப்புற செய்திட வைக்கிறது. இதனால் மன அழுத்தம், மன பதட்டம், மன உளைச்சல் நீங்கி, மனம் சமநிலை அடைந்து, உற்சாகத்தை நோக்கி பயணிக்கத் தொடங்குகிறது. 

வண்ணம் திட்டுவது என்பது இயல்பான விடயமாக இருந்தாலும் அந்தப் பணியினை மேற்கொள்ளும் போது நீங்கள் இலத்திரனியல் சாதனங்களின் பாவனையை குறைத்து, மனதை ஒருமுகப்படுத்தி நிகழ்கால தருணத்தின்  நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது  மனதின் இயல்பை மீட்டெடுக்க உதவும். 

வைத்தியர் ஸ்ருதி
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூச்சுத் திணறல் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-03-12 17:30:56
news-image

தொண்டை புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-03-11 14:44:38
news-image

இலங்கைச் சுகாதாரத் துறையின் எதிர்காலம்: தனியார்...

2026-03-10 15:46:44
news-image

மௌத் அல்சர் எனும் வாய் புண்...

2026-03-10 15:00:58
news-image

எபிகாஸ்ட்ரிக் வலிக்கான நவீன சிகிச்சை

2026-03-09 14:14:08
news-image

பித்தப்பை கொழுப்பு கட்டி பாதிப்பிற்கான சிகிச்சை

2026-03-07 17:08:25
news-image

மீண்டும் மீண்டும் ஏற்படும் அரிதான மூளை...

2026-03-06 15:47:00
news-image

பைலெக்டாசிஸ் எனும் சிறுநீரக பாதிப்பிற்கான சிகிச்சை

2026-03-05 15:39:37
news-image

ஓகுலோபிளாஸ்ரி எனும் கண் பாதிப்பிற்கு நிவாரணம்...

2026-03-04 18:37:34
news-image

பிரியாணியை யார் பசியாற கூடாது..?

2026-03-03 17:16:32
news-image

உயிருக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் கால் பகுதியில்...

2026-03-02 15:01:52
news-image

பெருங்குடல் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் ஹெமிகோலெக்டோமி...

2026-02-28 18:01:58