2026ல் 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் ; பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் - பிரதமர் ஹரிணி அமரசூரிய

05 Feb, 2026 | 02:53 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

2026 ஆம் ஆ ண்டு  முதற்கட்டமாக 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே  பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள்  என்று பகிரங்கமாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் மற்றும்  வதந்திகளுக்கு முன்னுரிமை வழங்கி கேள்விகளை கேட்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம்  தயவுடன்  கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அமர்வின் போது எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலவச கல்வி குறித்து  எதிர்க்கட்சித் தலைவர் அக்கறை கொண்டுள்ளதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் கடந்த காலங்களில் இவ்வாறான கொள்கையை கொண்டிருக்கவில்லை. தற்போது மாற்றமடைந்துள்ளதையிட்டு அவருக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் மற்றும்  வதந்திகளுக்கு முன்னுரிமை வழங்கி கேள்விகளை கேட்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம்  தயவுடன்  கேட்டுக் கொள்கிறேன்.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பீடத்தை மூடுவதற்கும், கம்பஹா விக்கிரமராராச்சி பல்கலைக்கழகத்தை மூடுவதற்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

முறையான வழிமுறைகள் மற்றும் வளங்கள் இல்லாமலேயே  கம்பஹா விக்கிரமராராச்சி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதனால் அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இது குறித்து ஆராய்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த ஆண்டு முதற்கட்டமாக 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே  பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள்  என்று பகிரங்கமாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

பாடத்திட்டம் அரசியல் கட்சிகள் ஊடாக  தயாரிக்கப்படுவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் குறிப்பிட்டுக் கொள்கிறேன். அதற்கு சட்டத்தால் உருவாக்கப்பட்ட அரச நிறுவனம் உள்ளது. அதில் எம்மால் தலையிட முடியாது. புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடந்த மாதங்களில் வழங்கிய ஒத்துழைப்பை  நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். கல்வி மறுசீரமைப்பு பற்றி அவர்  தொடர்ச்சியாக அவதானம் செலுத்துவது வரவேற்கத்தக்கது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் கப்பல்கள் வருகை: கடற்படை தளபதி...

2026-03-06 19:18:33
news-image

பொது அவசரகால நிலையை அறிவிக்கும் பிரேரணை...

2026-03-06 18:35:28
news-image

“க்ளீன் ஶ்ரீ லங்கா” திட்டம் :...

2026-03-06 18:38:26
news-image

இரவில் சட்டவிரோதமாக சுழியோடி கடல் அட்டைகளை...

2026-03-06 18:22:46
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை...

2026-03-06 17:55:34
news-image

இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களுக்கு விரைவான...

2026-03-06 17:14:33
news-image

மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம்...

2026-03-06 17:06:31
news-image

அச்சகத் துறையில் நவீன தொழில்நுட்பம் அவசியம்...

2026-03-06 16:52:48
news-image

ஈரானின் 'புஷேர்' கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 208...

2026-03-06 16:46:34
news-image

சுற்றுலா விடுதியில் நபரொருவர் உயிர்மாய்ப்பு

2026-03-06 16:51:16
news-image

திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன?...

2026-03-06 16:12:39
news-image

இலங்கையில் முதலீடுகளைத் தக்கவைக்க நிலையான கொள்கை...

2026-03-06 16:54:35