பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் HL-FRAC உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது!

05 Feb, 2026 | 12:42 PM
image

வெளிநாட்டு நிவாரண உதவிகள் (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழுவான HL-FRAC இன் மற்றொரு கூட்டம், கடந்த 03 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.

வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பை மீளாய்வு செய்வதுடன், அனைத்து நிவாரண நடவடிக்கைகளிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்தும் தீர்மானமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது.

நிவாரண உதவிகளை திட்டமிட்ட, வெளிப்படையான மற்றும் சமத்துவமான முறையில் ஒதுக்கி விநியோகிப்பது தொடர்பாக குழு உறுப்பினர்கள் விரிவாகக் கலந்துரையாடினர். அத்துடன், இந்நிவாரணங்கள் குறித்த சமூகங்களுக்கு பயனளிப்பதோடு, எதிர்கால விநியோகத் தேவைகளின் முகாமைத்துவத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கிடையிலும் பயனுள்ள ஒத்துழைப்பு அவசியம் எனக் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு நிவாரண உதவிகளின் பயன்திறனை அதிகரிப்பதற்காக, நிவாரண ஒருங்கிணைப்பு கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தேவையான அனைத்து அறிக்கைகள் மற்றும் விவரங்களை தாமதமின்றி ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு குழுவிற்கு அவர் பணிப்புரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் HL-FRAC குழு உறுப்பினர்கள், அனர்த்த முகாமைத்துவ மையத்தின் (DMC) சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலக அதிகாரிகள், ஜனாதிபதி செயலக பிரதிநிதிகள் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கமவில் சட்டத்தரணி சுட்டுக் கொலை ;...

2026-02-14 12:32:11
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம்...

2026-02-14 12:07:31
news-image

காதலர் தினம் ; நுவரெலியாவில் சிவப்பு...

2026-02-14 11:59:49
news-image

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை...

2026-02-14 11:25:41
news-image

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

2026-02-14 11:04:22
news-image

காதலர் தினத்தன்று பூக்கள் விற்பனையில் பாரிய...

2026-02-14 10:44:44
news-image

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 7 துப்பாக்கிச்...

2026-02-14 10:35:17
news-image

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர் செல்லுபடியாகும்...

2026-02-14 10:18:55
news-image

நாட்டில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு விபத்துகளில்...

2026-02-14 09:39:58
news-image

தலங்கம துப்பாக்கிச் சூடு ; உயிரிழந்தவர்...

2026-02-14 09:15:43
news-image

'இந்தியா - AI உச்சி மாநாடு...

2026-02-14 08:59:50
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-02-14 08:48:57