கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மூன்று இலங்கை விமானப் பயணிகள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (05) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வெளிநாட்டு சிகரட்டுகள் சுமார் 12.87 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் 61, 42 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும், நீர்கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இன்று அதிகாலை 03.30 மணிக்கு சாஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து, 06 பைகளில் 85,800 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 429 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் 11ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM