“முழு நாடுமே ஒன்றாக”: ஜனாதிபதியின் அதிரடித் திட்டத்தில் 800க்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுடன் கைது!

Published By: Digital Desk 1

05 Feb, 2026 | 11:17 AM
image

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று புதன்கிழமை (04) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 802 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 16 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 794 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், 06 பேர் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 495 கிராம் ஹெரோயின், 01 கிலோகிராம் 58 கிராம் ஐஸ், 11 கிராம் 200 மில்லிகிராம் கொக்கெய்ன், 02 கிலோகிராம் 710 கிராம் கஞ்சா, 02 கஞ்சா செடிகள், 01 கிலோகிராம் 42 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 464 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 395 போதை மாத்திரைகள், 01 கிலோகிராம் 85 கிராம் மதனமோதகம் மற்றும் 111 கிராம் மாவா போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மும்பாயிலிருந்து 862 சுற்றுலாப் பயணிகளுடன் காங்கேசன்துறையை...

2026-08-14 09:36:34
news-image

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் அழிப்பு!

2026-08-14 09:36:16
news-image

நிலக்கரி தட்டுப்பாட்டினால் மின்வெட்டு ஏற்படாது: அமைச்சர்...

2026-08-14 09:34:10
news-image

வத்தளை துப்பாக்கிச் சூடு ; இந்தியாவுக்குத்...

2026-08-14 09:28:27
news-image

எந்தவொரு வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகவில்லை –...

2026-08-14 09:18:30
news-image

இன்றைய வானிலை 

2026-08-14 09:17:07
news-image

ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை...

2026-08-14 06:40:21
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின்...

2026-08-14 06:44:42
news-image

கொழும்பில் இந்தோனேஷிய கலாசார மண்டபம் திறப்பு

2026-08-14 06:48:31
news-image

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை...

2026-08-14 06:24:31
news-image

மெகசின் சிறை வன்முறையில் திட்டமிட்ட தாக்குதல்;...

2026-08-14 06:20:00
news-image

ஜனாதிபதியின் மத நல்லிணக்கத்திற்கு தொல்லியல் திணைக்களம்...

2026-08-14 06:12:16