மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய அமெரிக்க நீதித்துறை ஆவணங்களில், தனது முன்னாள் கணவரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவுநருமான பில் கேட்ஸின் பெயர் இடம்பெற்றுள்ளது, தனது “திருமண வாழ்க்கையின் மிக வலிமிகுந்த காலங்களை மீண்டும் கிளறியுள்ளதாக” கோடீஸ்வர பரோபகாரரும் சமூக செயற்பாட்டாளருமான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் என்.பி.ஆர் (NPR) ஊடகத்தின் ‘Wild Card’ என்ற பொட்காஸ்டிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எப்ஸ்டீன் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து தாம் “நம்பமுடியாத சோகத்தை” உணர்வதாகவும், அந்த ஆவணங்களில் தனது முன்னாள் கணவருர் உட்பட, பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், தங்களது நிலைப்பாடுகளுக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இந்தக் குழப்பங்கள் மற்றும் அசுத்தங்களிலிருந்து நான் விலகி இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தெரிவித்தார். 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின்னர், பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தம்பதியினர் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.
அமெரிக்க நீதித்துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்ட மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களில், ஜெப்ரி எப்ஸ்டீன், பில் கேட்ஸுக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய் ஏற்பட்டதாக கூறியுள்ள குற்றச்சாட்டுகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கூற்றுகள் குறித்து பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர், “நிரூபிக்கப்பட்ட, நம்பகத்தன்மையற்ற பொய்யரிடமிருந்து வந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அபத்தமானவை மற்றும் முழுமையாகத பொய்யானவை” என்று தெரிவித்தார்.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் எந்த நபராலும் பில் கேட்ஸ்மீது பாலியல் தவறான நடத்தை குறித்த குற்றச்சாட்டு இதுவரை முன்வைக்கப்படவில்லை. மேலும், இந்த ஆவணங்களில் அவரது பெயர் இடம்பெற்றிருப்பது எந்தவொரு குற்றச் செயலையும் குறிக்காது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பொட்காஸ்டில் தொடர்ந்து பேசிய மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், “அந்த விவரங்கள் வெளிவரும் போதெல்லாம் அது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில், அது எனது திருமண வாழ்க்கையின் மிக மிக வலிமிகுந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது” என்று கூறினார்.
“இன்னும் எஞ்சியிருக்கும் கேள்விகள் எவை இருந்தாலும், அவை அந்த நபர்களுக்கும், எனது முன்னாள் கணவருக்கும் உரியவை. அவர்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டும்; நான் அல்ல” என்று தெரிவித்தார்.
அவர்களின் விவாகரத்திற்கு முன்னரே, எப்ஸ்டீனுடன் தனது கணவரின் தொடர்பு குறித்து மெலிண்டா அதிருப்தியடைந்திருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன. விவாகரத்து அறிவிக்கப்பட்ட பின்னர், 2019 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவருடன் தனக்கு தொடர்பு இருந்ததை பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டிருந்தார்.
2013 ஜூலை 18 திகதியிட்ட இரண்டு மின்னஞ்சல்கள் எப்ஸ்டீனால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவை பில் கேட்ஸுக்கு அனுப்பப்பட்டதா என்பது தெளிவாக இல்லை. குறித்த மின்னஞ்சல்கள் எப்ஸ்டீனின் மின்னஞ்சல் கணக்கிலிருந்து அதே கணக்கிற்கே மீண்டும் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் பில் கேட்ஸுடன் தொடர்புடைய எந்த மின்னஞ்சல் முகவரியும் காணப்படவில்லை.
இந்த மின்னஞ்சல்களில் ஒன்றில், “ரஷ்யப் பெண்களுடன் ஏற்பட்ட உறவுகளின் விளைவுகளை சமாளிக்க” பில் கேட்ஸுக்கு மருந்துகள் வாங்கியதாக கூறப்பட்டுள்ளதுடன், மற்றொன்றில் அவரது நட்பு முறிந்தது குறித்த புலம்பல்களும் இடம்பெற்றுள்ளன.
நீதித்துறையால் வெளியிடப்பட்ட ஆவணங்கள், பிரபலங்கள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் உலக அரசியல் தலைவர்களுடன் எப்ஸ்டீன் கொண்டிருந்த பரந்த தொடர்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. 2008 ஆம் ஆண்டு 14 வயது சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிந்ததாக தண்டனை பெற்ற பின்னரும், இந்த தொடர்புகள் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டு பாலியல் கடத்தல் வழக்கில் விசாரணைக்காகக் காத்திருந்த நிலையில், ஜெப்ரி எப்ஸ்டீன் நியூயோர்க் சிறையில் உயிரிழந்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM