ஹட்டன் பிரகடனத்தைப் பெட்டிக்குள் போட்டு மூடி வைத்துள்ளது அரசாங்கம் - வசந்த முதலிகே சாடல்

05 Feb, 2026 | 10:48 AM
image

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாட்டின் ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் 'ஹட்டன் பிரகடனம்' என்பது மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குருதியாகவே மாத்திரமே அமைந்தது. அதில் கூறப்பட்ட வாக்குறுதிகள் எதனையும் மலையக மக்களுக்கு இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், அந்தப் பிரகடனத்தைப் பெட்டிக்குள் போட்டு மூடி வைத்துள்ளதாகவும் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (04) 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"நாட்டின் சுதந்திர தினம் ஒருபுறம் கொண்டாடப்படும் நிலையில், நாட்டின் மத்திய பகுதியான ஹட்டனில் மலையக மக்களின் உரிமைகள் தொடர்பான மாநாட்டை நாம் நடத்துகிறோம். 'எமக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் எங்கே? எமக்கான சுதந்திரத்தை வழங்குங்கள்' என்ற கோரிக்கையையே நாம் முன்வைக்கிறோம்.

மலையக மக்களின் வரலாற்றைப் பார்த்தால், இந்த நாட்டுக்குப் பாரிய இலாபத்தைப் பெற்றுக்கொடுக்கும் இவர்களின் வரலாறு 200 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இத்தனை காலமும் மக்கள் கோரி வரும் காணி உரிமை, தனிவீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை. அதனால்தான் எமது உரிமைகளை வழங்குவதுடன், எம்மைத் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்குமாறும் உரக்கக் கூறுகிறோம்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், ஹட்டன் பிரகடனத்தில் அநுரகுமார திஸாநாயக்க பல வாக்குறுதிகளை வழங்கியமை அனைவருக்கும் நினைவிருக்கும். மலையக மக்கள் கோரிய அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுப்போம் என அதில் கூறப்பட்டது. வீட்டு உரிமை, சுகாதாரம், கல்வி மற்றும் லயன் வாழ்க்கையிலிருந்து மக்களை விடுவிப்போம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், அவை அனைத்தும் வெறும் தேர்தல் வாக்குருதிகளாகவே முடிந்துவிட்டன.

சர்வதேச நாடுகளுக்குச் சுவையான தேயிலையைத் தயாரித்து அனுப்பும் மலையக மக்கள், அன்றாடம் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வளவு காலமாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் இம்மக்களின் பிரச்சினைகளை மறந்துவிட்டனர். அனர்த்தங்கள் மற்றும் மண்சரிவுகளின்போது பாதிக்கப்படுவது நீங்கள்தான்; லயன் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தபோது துயரப்படுவது நீங்கள்தான்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியாளர்கள் உங்கள் முன்னால் 'லோசிஞ்சரை' (மிட்டாய்) நீட்டுவது போல வாக்குறுதிகளைத் தருகிறார்கள். அழகான வாழ்க்கை, உரிமைகள் தருவோம் எனக்கூறி வாக்குகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

1964ஆம் ஆண்டு சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் பின்னர் மலையக மக்கள் இங்கிருந்து பலவந்தமாகத் தலைமன்னாருக்கு அனுப்பப்பட்டனர். கண்டி, கேகாலை எனப் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அந்த அவலமான பயணத்தைச் சுமந்த புகையிரதத்திற்கு 'அந்தோனாவ' என்று பெயரிடப்பட்டது. 1964இல் தொடங்கிய அந்த அவலம் இன்றும் ஓயவில்லை. அண்மையில் ஏற்பட்ட 'டிட்வா' (Tidwa) சூறாவளியின் போதும், மிரியபெத்த மண்சரிவின் போதும் மீண்டும் அதே அழுகுரல்களே கேட்டன. இந்த அவல நிலைக்கு (அந்தோனாவிற்கு) ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்குவதாக ஜனாதிபதி கூறினார். ஆனால், மலையகத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு அது கிடைக்கவில்லை; இனிமேல் கிடைக்கவும் போவதில்லை. வரும் காலங்களில் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்வது கூடக் கடினமான சூழல் ஏற்படும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வேலைத்திட்டத்தின் கீழேயே நாடு இயங்கிக் கொண்டிருக்கின்றது" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48
news-image

ஆடை ஏற்றுமதியில் பிராந்தியத்திலேயே மிக அதிக...

2026-02-12 20:24:29
news-image

சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே...

2026-02-12 16:37:44
news-image

அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து தேசிய...

2026-02-12 20:24:09
news-image

இலங்கையின் கட்டுமானத்துறையில் முதலாவது 'தீ பாதுகாப்பு...

2026-02-12 20:23:42
news-image

2026 சர்வதேச மகளிர் தின தேசிய...

2026-02-12 20:25:04
news-image

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர்...

2026-02-12 20:23:21