இலங்கையில் 3,000-க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் 10-க்கும் குறைவான ஆசிரியர்கள்!

Published By: Digital Desk 1

05 Feb, 2026 | 10:56 AM
image

நாடு முழுவதும் பத்திற்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 10,047 பாடசாலைகள் இருப்பதாக, 2025ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன.

அவற்றில் 3,065 பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்கள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த பாடசாலைகளில் ஒன்று தேசியப் பாடசாலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1,645 அரச பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அரச பாடசாலைகளில், ஒரு தேசியப் பாடசாலையும், 1,644 மாகாணப் பாடசாலைகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

51 முதல் 100 மாணவர்கள் வரை உள்ள 1,648 அரச பாடசாலைகள் இருப்பதாகவும், அந்தப் பாடசாலைகள் அனைத்தும் மாகாணப் பாடசாலைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

2025ஆம் ஆண்டில் தரம் ஒன்றில்; 266,281 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09