நாட்டில் இரு வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு!

Published By: Digital Desk 1

05 Feb, 2026 | 08:49 AM
image

நாட்டில் இரு வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (04) நீரில் மூழ்கி  இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, அவிசாவளை - புவக்பிட்டிய பகுதியில், ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாலபே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இவர் குழுவொன்றுடன், அவிசாவளை பகுதிக்கு சுற்றுலா சென்றதாகவும், ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சிகிரியா - திகம்பதஹ பகுதியில் உள்ள மஹா வாவியில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கேகாலை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் நண்பர்கள் குழுவுடன் மஹா வாவியில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமல் சிறைசென்றுள்ளமை அரசியல் பழிவாங்கல் அல்ல...

2026-09-12 17:17:36
news-image

செயற்கையான டீசல் தட்டுப்பாட்டை உருவாக்கி எரிபொருள்...

2026-09-12 17:15:27
news-image

சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத...

2026-09-12 18:02:29
news-image

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை சி.டி.ஸ்கேன் நிதி...

2026-09-12 17:44:49
news-image

வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான...

2026-09-12 17:16:55
news-image

அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் பேருந்துடன்...

2026-09-12 17:15:07
news-image

மக்களின் பங்களிப்போடு புதிய அரசியலமைப்பு வேண்டும்...

2026-09-12 15:07:30
news-image

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக...

2026-09-12 16:17:37
news-image

கடந்த அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்தைப் போன்றே இவ்...

2026-09-12 16:17:21
news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07
news-image

மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை:...

2026-09-12 15:45:08