நாட்டில் பல பகுதிகளில் அதிரடிச் சோதனை: மதுபான உற்பத்தி நிலையங்கள் முற்றுகை!

Published By: Digital Desk 1

05 Feb, 2026 | 08:57 AM
image

நாட்டில் பல பகுதிகளில் நேற்று புதன்கிழமை (04) மேற்கொள்ளப்பட்ட அடிரடிச் சோதனையில் மதுபான உற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டதில் மூவர் கைதுசெய்யப்பட்டுளளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தளம் - அட்டவில்லுவ பகுதியில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 1072 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதுடன், அவர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை,அத்தனகல்ல - மகுலுவெல்ல பகுதியில்,  சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 1260  லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் உராபொல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

அத்தனகல்ல பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேநேரம், மொரகஹஹேன - கொடிகமுவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 1512 கோடா லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூதூர் சந்தையில் கைப்பற்றப்பட்ட 500 கிலோ...

2026-07-14 11:58:00
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை;...

2026-07-14 11:31:55
news-image

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19...

2026-07-14 11:31:37
news-image

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை...

2026-07-14 11:26:29
news-image

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன்...

2026-07-14 11:14:47
news-image

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள்...

2026-07-14 10:45:46
news-image

ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை...

2026-07-14 10:47:25
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் முக்கிய...

2026-07-14 10:22:54
news-image

2026ஆம் ஆண்டின் உலகின் சிறந்த 50...

2026-07-14 10:35:12
news-image

போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு வரும் போலி...

2026-07-14 10:21:51
news-image

அம்பாறையில் தேங்காய் நார் தொழிற்சாலையில் பாரிய...

2026-07-14 10:00:06
news-image

போதைப்பொருள், கண்ணிவெடிகள் உள்ளிட்ட பொருட்களுடன் இளைஞன்...

2026-07-14 10:47:49