யாழ். மண்டைதீவு சிறுத்தீவு கடலில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 6 மாணவர்களில் மூன்று மாணவர்களது இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன.

 

ஏனைய மாணவர்களது இறுதிகிரிகைகள் இன்றும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும்  இடம்பெறவுள்ளது.

 

உரும்பிராய் கிழக்கு பகுதியை சேர்ந்த யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவனான சின்னதம்பி நாகசுலோஜன்,அத்தியடி பகுதியை சேர்ந்த யாழ் பெரியபுலம் மாகவித்தியாலய மாணவனான கோணேஸ்வரன் பிரவீன், சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த சண்டிலிப்பாய் மத்திய கல்லுரி மாணவனான புனேந்திரன் தனுசன் ஆகியோரது இறுதிகிரிகைகளே நேற்று இடம்பெற்றன.

 

கடந்த திங்கட்கிழமை மண்டைதீவு சிறுத்தீவு பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்றிருந்த போது சிறுத்தீவு இறங்குதுறையில் கட்டப்பட்டிருந்த படகு ஒன்றை எடுத்துக் கொண்டு 7 மாணவர்கள் கடலுக்குள் சென்றிந்த நிலையில், படகு கவிழ்ந்து 6 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர்.

 

இதனை தொடர்ந்து கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து நடத்திய தேடுதலில் 6 மாணவர்களினதும் சடலங்களும் மீட்க்கப்பட்டிருந்தன.

 

மீட்கப்பட்ட சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று முன்தினம் நண்பகல் சடலங்கள் யாவும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

 

இந்நிலையில் உயிரிழந்த மூன்று மாணவர்களது இறுதி கிரிகைகள் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.