'75 ஆண்டு கால சாபம்' என்ற கருத்தை சுதந்திர தின உரையில் மக்கள் மத்தியில் ஜனாதிபதி நிராகரித்துள்ளார் - கலாநிதி ஹர்ஷ டி சில்வா

04 Feb, 2026 | 02:52 PM
image

(எம்.மனோசித்ரா)

தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, '75 ஆண்டு கால சாபம்' என்ற கருத்தை நிராகரித்துள்ளார். அந்த வகையில் கடந்த 75 ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்துமே மோசமானவை அல்ல. கடந்த 78 ஆண்டு கால வரலாற்றில் நிகழ்ந்த பலமான, நீதியான மற்றும் நல்ல விடயங்களை நாம் முன்னோக்கி எடுத்துச் சென்று பலப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

புதன்கிழமை (04) கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வுகள் நிறைவடைந்ததன் பின்னர் காணொளியொன்றை வெளியிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உரையை சுட்டிக்காட்டி ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்தார். குறித்த காணொளியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் காலனித்துவ ஆட்சியிலிருந்து நாட்டை விடுவித்த போதிலும், எமக்கு இன்னும் உண்மையான பொருளாதார சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதே முதல் உண்மையாகும். பொருளாதார சுதந்திரம் கிடைக்கும் போதுதான் இலங்கை மக்கள் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அப்போதுதான் எமது மக்கள் தமது உழைப்பையும், செல்வத்தையும் தமக்கு விருப்பமான, திருப்திகரமான வழியில் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

தற்போதைய சூழ்நிலையில், மக்கள் தமது சொத்துக்களையும் உழைப்பையும் தமக்கேற்றவாறு சுதந்திரமாகப் பயன்படுத்த முடிகிறதா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகும். இதை அனைவரும் அறிவார்கள். நாம் உலகத்துடன் கைகோர்த்து, உலகத்துடன் உறவுப் பாலங்களை அமைத்து, மக்களின் திறமைகள் ஊடாகப் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். அந்த வளர்ச்சியின் பலன்கள் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் ஒரு பொருளாதார முறையை உருவாக்க வேண்டும். அதுவே உண்மையான சுதந்திரமாகும்.

இன்றைய உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுவாகக் கூறாத ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். கடந்த 78 ஆண்டுகளில் நல்ல விடயங்களும் நடந்தன, தீய விடயங்களும் நடந்தன என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். குறிப்பாக, கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்த '75 ஆண்டு கால சாபம்' என்ற கருத்தை ஜனாதிபதி இன்று மக்கள் மத்தியில் ஆற்றிய உரையில் நிராகரித்துள்ளார்.

இதைத்தான் நாம் நீண்டகாலமாகக் கூறி வருகிறோம். கடந்த 75 ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்துமே மோசமானவை அல்ல. நல்ல விடயங்களும் இடம்பெற்றுள்ளன. அதேவேளை மோசமான விடயங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே, காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற கடந்த 78 ஆண்டு கால வரலாற்றில் நிகழ்ந்த பலமான, நீதியான மற்றும் நல்ல விடயங்களை நாம் முன்னோக்கி எடுத்துச் சென்று பலப்படுத்த வேண்டும். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர

2026-08-16 08:55:06
news-image

ஆகஸ்ட் 30-இல் சர்வதேச மாநாடு: காணாமல்...

2026-08-16 08:56:43
news-image

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும்...

2026-08-16 11:34:51
news-image

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை...

2026-08-16 09:28:15
news-image

‘ஸ்பைடர் வுமன்’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி...

2026-08-16 08:40:39
news-image

சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழி...

2026-08-16 08:39:58
news-image

22 ஆவது திருத்தம் செவ்வாய் பாராளுமன்றில்...

2026-08-16 08:39:12
news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27
news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00