4 மணி நேர வீர நீச்சல் : தாய், சகோதரன், சகோதரியை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவன்

Published By: Digital Desk 3

04 Feb, 2026 | 12:30 PM
image

மேற்கு அவுஸ்திரேலியாவின் குயிண்டாலப் (Quindalup) கடற்கரை பகுதியில், தனது குடும்பத்தினர் கடல் அலையால் ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், சுமார் நான்கு மணிநேரம் தொடர்ந்து நீந்திச் சென்று அவர்களது உயிரைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன் ஆஸ்டின் அப்பல்பீ (Austin Appelbee) தற்போது ‘மாவீரனாக’ பாராட்டப்பட்டு வருகிறான்.

கடந்த வெள்ளிக்கிழமை விடுமுறைக்காக குயிண்டாலப் பகுதிக்கு சென்றிருந்த ஆஸ்டின், அவனது தாய் ஜோவான் (Joanne) (47), சகோதரன் போ ( Beau) (12) மற்றும் தங்கை கிரேஸ் (Grace) (8) ஆகியோர் படகு மற்றும் துடுப்புப் பலகைகளில் (Paddle Boards) கடலில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் ஏற்பட்ட பலத்த காற்றும் கடல் சீற்றமும் காரணமாக அவர்கள் கரையிலிருந்து வெகுதூரம் ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

நிலைமை ஆபத்தானதாக மாறியதை உணர்ந்த தாய் ஜோவான், தனது மூத்த மகன் ஆஸ்டினிடம் உதவி கோரி கரையை அடைந்து தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார். ஆரம்பத்தில் ஒரு காற்றடைத்த சிறிய படகில் (Inflatable Kayak) செல்ல முயன்ற ஆஸ்டின், அதில் நீர் புகுந்ததைத் தொடர்ந்து படகை கைவிட்டு கடும் அலைகளுக்கு மத்தியில் நீந்தத் தொடங்கினான்.

சுமார் 4 மணிநேரம் தொடர்ந்து சீற்றமான கடலில் நீந்திய அவன், தொடக்கத்தில் அணிந்திருந்த உயிர் காக்கும் கவசம் (Life Jacket) நீந்துவதற்கு தடையாக இருந்ததால், பாதியிலேயே அதைக் கழற்றிவிட்டு நீந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

“அலைகள் ராட்சத வடிவில் இருந்தன. என்னிடம் உயிர் காக்கும் கவசம் இல்லை. ‘தொடர்ந்து நீந்து… நிறுத்தக்கூடாது’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன்,” என ஆஸ்டின் பின்னர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மாலை 6.00 மணியளவில் கரையை அடைந்த ஆஸ்டின், அங்கிருந்த மக்களிடம் உடனடியாக தகவல் வழங்கினார். இதனையடுத்து கடற்படை, காவல்துறை மற்றும் அவசர மீட்புப் பிரிவுகள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தன.

இரவு 8.30 மணியளவில், கரையிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில், ஒரு துடுப்புப் பலகையைப் பிடித்துக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்த தாய் ஜோவான் மற்றும் இரு பிள்ளைகளை மீட்பு படையினரின் ஹெலிக்காப்டர் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டது.

சுமார் 10 மணிநேரம் குளிரான கடலில் தத்தளித்ததால், அவர்கள் அனைவரும் கடுமையான நடுக்கத்துடன் இருந்தனர். குறிப்பாக 12 வயது சிறுவன் போ, தனது கால்களில் உணர்வை இழந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அனைவரும் உயிருக்கு ஆபத்தான காயங்களின்றி மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீட்புப் படைத் தளபதி பால் பிரெஸ்லேண்ட்,

“ஒரு 13 வயது சிறுவன் காட்டிய துணிச்சல், அதிமானுடச் செயலுக்கு இணையானது,” என ஆஸ்டினின் வீரத்தை பாராட்டினார்.

இதுபோலவே காவல்துறை அதிகாரி  ஜேம்ஸ் பிராட்லி,

 “அந்தச் சிறுவனின் மன உறுதியும் தைரியமுமே இன்று ஒரு குடும்பத்தின் உயிரைக் காப்பாற்றியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம், வயதை விட மன உறுதியும் துணிச்சலுமே உண்மையான வீரத்தை நிரூபிக்கும் என்பதற்கான ஓர் உயிர்ப்பான உதாரணமாக உலகெங்கும் பேசப்பட்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஈரானில் அதிகார மாற்றம் ஒரு நல்ல...

2026-02-14 13:04:46
news-image

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து...

2026-02-14 12:26:49
news-image

பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் !...

2026-02-14 12:20:32
news-image

கரீபியன் கடலில் படகு ஒன்றின் மீது...

2026-02-14 11:05:44
news-image

கியூபா தலைநகர் ஹவானா எண்ணெய் சுத்திகரிப்பு...

2026-02-14 10:22:35
news-image

மடகாஸ்கரை தாக்கிய ‘கெசானி’ சூறாவளி :...

2026-02-14 09:57:52
news-image

"தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்'...

2026-02-13 14:26:43
news-image

இம்ரான் கானின் வலது கண்ணில் 85...

2026-02-13 12:24:39
news-image

சீனாவின் மீன்பிடி படகை கைப்பற்றியது ஜப்பான் 

2026-02-13 12:42:27
news-image

திடீரென வீதி உள்வாங்கப்பட்டதால் பாரிய பள்ளம்!...

2026-02-13 11:39:38
news-image

ரஷ்ய வான்வழித் தாக்குதலால் உக்ரேனில் மின்சார...

2026-02-13 11:20:19
news-image

16 வயதிற்குட்பட்டோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த...

2026-02-13 10:44:56