போர்ட் சிட்டி கொழும்பு முதலீட்டாளர் மன்றம் : இலங்கையின் பொருளாதார மாற்றத்தை உலகிற்கு எடுத்துரைத்த முக்கிய நிகழ்வு

04 Feb, 2026 | 11:33 AM
image

இலங்கையின் எதிர்கால பொருளாதார மாற்றத்துக்கான மையமாக போர்ட் சிட்டி கொழும்பு விளங்குவதாக வலியுறுத்தும் தெளிவான செய்தி, சிங்கப்பூரில் ஷாங்கிரிலா ஹோட்டலில் கடந்த ஜனவரி 27 அன்று நடைபெற்ற “போர்ட் சிட்டி கொழும்பு பிரத்யேக முதலீட்டாளர் மன்றம்” (Exclusive Port City Colombo Investor Forum) ஊடாக உலக முதலீட்டாளர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த உயர்மட்ட முதலீட்டாளர் மன்றம், சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் போர்ட் சிட்டி கொழும்பு ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் நிலச்சொத்து, நிதி சேவைகள், முதலீட்டு மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள், தொழில்முறை சேவைகள் உள்ளிட்ட துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 100 மூத்த முதலீட்டாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வைத் தொடங்கி உரையாற்றிய சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் செனரத் திசாநாயக்க,

இலங்கை–சிங்கப்பூர் மற்றும் பிராந்திய நாடுகளுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். உலக தரநிலைகளுடன் ஒத்திசைவாக செயல்படும் இலங்கையின் தயார்பாட்டின் அடையாளமாக போர்ட் சிட்டி கொழும்பு விளங்குவதாகவும் அவர் கூறினார்.

முதன்மை உரையை நிகழ்த்திய வெளிநாட்டு முதலீட்டுக்கான ஜனாதிபதியின் சிறப்பு தூதுவரும் மேல் மாகாண ஆளுநருமான ஹனிப் யூசூப்,

இலங்கை இன்று ஒரு மீட்புக் கதையல்ல; அது ஒரு மாற்றத்தின் கதை” எனத் தெரிவித்தார். கடந்த காலத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, பொருளாதார வளர்ச்சி மீண்டும் தொடங்கியுள்ளதுடன், வெளிநாட்டு கையிருப்புகள் வலுப்பெற்றுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த மீட்பு, சர்வதேச நிதி நிறுவனங்களால் உலகின் வேகமான மீட்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீண்டகால சீர்திருத்தங்கள், நிறுவனங்களின் சுயாதீனம் மற்றும் நிதி ஒழுக்கம் ஆகியவற்றில் இலங்கை உறுதியுடன் இருப்பதாகக் கூறிய சிறப்பு தூதுவர், சுயாதீன மத்திய வங்கி, நிதி மற்றும் கடன் மேலாண்மைச் சட்டங்கள், வெளிப்படையான விதிமுறைகளைக் கொண்ட பொருளாதார கட்டமைப்பு ஆகியவை முதலீட்டாளர்களுக்கான நம்பகத்தன்மையை உயர்த்துவதாக விளக்கினார்.

மேலும், பொதுச் சட்ட மரபு (Common Law), இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்கள், இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கைகள், சர்வதேச நடுவர் தீர்ப்புகளுக்கான அங்கீகாரம் ஆகியவை முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குகின்றன எனத் தெரிவித்தார்.

கொழும்பு போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர் ஹர்ஷ அமரசேகர (PC),

2021 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஆணைக்குழுவின் நிர்வாக கட்டமைப்பை விளக்கினார். போர்ட் சிட்டி, இலங்கையின் முதல் பல்துறை சேவை அடிப்படையிலான சிறப்பு பொருளாதார மண்டலமாக (Multi-Services SEZ) செயல்படுவதாகவும், ஒரே சாளர சேவை, முதலீட்டுப் பாதுகாப்பு, கணிக்கக்கூடிய ஊக்குவிப்புத் திட்டங்கள் மற்றும் வலுவான சட்டப் பாதுகாப்புகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் வணிக உலகின் பிரதிநிதிகளான GFTN Capital நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் CEO நீல் பாரேக் மற்றும் REDAS நிறுவனத்தின் CEO அந்தோனி சுவா, போர்ட் சிட்டி கொழும்பு பிராந்திய மற்றும் உலக முதலீட்டாளர்களுக்கான முக்கிய வாயிலாக உருவெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், கெப்பல் (Keppel) போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் பங்குபற்றலும், நிலைத்த நகர அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான ஆலோசனைகளும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியதாகக் கூறப்பட்டது.

CPCEC பணிப்பாளர் நாயகம் ரேவன் விக்கிரமசூரிய,

நீண்டகால வரி ஊக்குவிப்புகள், வெளிநாட்டு நாணயச் சட்டத்தின் கீழான தளர்வுகள், 16 வெளிநாட்டு நாணயங்களில் பரிவர்த்தனை, முதலீட்டாளர்களுக்கான “Green Channel” விசா வசதிகள் உள்ளிட்ட முதலீட்டு செயல்முறைகளை விளக்கினார்.

நிகழ்வின் இறுதியில் CHEC போர்ட் சிட்டி கொழும்பு நிறுவனத்தின் உதவி முகாமைத்துவப் பணிப்பாளர் பாய் சியாபிங்,

போர்ட் சிட்டி கொழும்பு, பிராந்திய தலைமையகங்கள், உலகளாவிய திறமைமிக்க பணியாளர்கள், தென் ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பொருளாதாரத்துடன் இணையும் முழுமையான வணிக சூழலாக உருவெடுப்பதாக தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதார நோக்குநிலை, முதலீட்டு வாய்ப்பு...

2026-07-17 14:11:28
news-image

Excello Developers நிர்மாணித்துள்ள ஆதவன் அடுக்குமனை:...

2026-07-16 19:06:20
news-image

2026 மாகாண பாடசாலை விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியாக...

2026-07-15 15:39:49
news-image

சிறிய, நடுத்தர வணிகங்களின் (SMB) வளர்ச்சியை...

2026-07-06 16:20:49
news-image

2,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 450க்கும் அதிக...

2026-07-06 13:23:11
news-image

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் தனது...

2026-07-03 17:26:38
news-image

அஞ்சியோகிராம் சத்திர சிகிச்சை கவசங்களை நன்கொடையாக...

2026-07-01 18:05:32
news-image

'கொட்டகல கஹட்ட ரச வாசனா 2025'...

2026-07-01 16:49:54
news-image

50 அதிர்ஷ்டசாலிகளுக்கு மவுண்டன் சைக்கிள்கள் வழங்கி...

2026-07-01 16:39:39
news-image

ரூ. 200 பில்லியன் சொத்து மதிப்பை...

2026-07-01 16:34:30
news-image

இளம் விளையாட்டு வீரர்களை உலகத் தரத்திற்கு...

2026-07-01 09:50:18
news-image

பணப் பாவனையற்ற டிஜிட்டல் இலங்கைக்கு வலுசேர்க்கும்...

2026-06-25 15:08:16