அயர்லாந்து தேசத்தில் முருகன் திருக்கோயில் தைப்பூசம் வழிபாடு

04 Feb, 2026 | 11:26 AM
image

சைவத்தினையும், தமிழினையும் சென்ற இடமெல்லாம் சிறப்புறச் செய்யும் தமிழர் மரபின் படி அயர்லாந்து தீவின் மத்தியில் அமைத்திருக்கும் அத்தலோன் மாநகரத்தில் 2022 ஆம் ஆண்டு முருகப்பெருமானுக்கு முதலாவது திருக்கோவில் கோண்டாவில் மேற்கை சேர்ந்த சிவத்திரு பொன்னுத்துரை சோமசூரியசிங்கத்தின் புதல்வன் சிவத்திரு காண்டீபனால்  நிறுவப்பட்டு நிர்வாகிக்கப்பட்டு வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து நாட்டின் தனிப்பெருஞ் சைவத்தமிழ் திருக்கோயிலாகிய இந்த முருகன் திருக்கோயில் தனது நான்காவது ஆண்டில் காலடி வைத்திருக்கும் இந்த வேளையில் கடந்த தைத் திங்கள் 19ம் நாள் நிறைமதி நன் நாளும், பூச விண்மீனும்,சித்த யோகமும் கூடிய முருகப்பெருமானுக்கே தனிப் பெரும் சிறப்புடைய காற்குளம் ( தைப்பூசம்) திரு நாளாம் ஞாயிற்றுக்கிழமை (01) காலை 8.30 மணி தொடக்கம் 12.30 மணிவரையான சித்த வேளையில் முருகப் பெருமான் சிறப்பு பரிமாணத்துடன் கூடிய பெருவழிபாட்டு மண்டபத்தில் எழுந்தருளினர்.

கோவிலுக்கான விமானத்தை (மண்டபத்தை) கோண்டாவில் மேற்கை சேர்ந்த ஸ்தபதி விவேகானந்தன் மோகனமுரளியால் அமைக்கப்பட்டது. இவ்வழிபாடுகளை தலைமை அருட்சுனைஞர் தென்னரசு (சோமசூரியசிங்கம் காண்டீபன்) தலைமையில் இடம்பெற்றது, அவர்களுடன் அருட்சுனைஞர் ரவிச்சந்திரன் வேலாயுதன், அருட்சுனைஞர் பிரதீசன் சேத்தரன் ஆகியோர் இணைந்துக்கொண்டனர். 

இந்த நிகழ்வில் அயர்லாந்தின் சகல பாகங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் இலங்கை, இந்தியா, மலேஷியா ,சிங்கப்பூர், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் மொறிசியஸ் நாட்டு பூர்வீகத்தை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் பாரம்பரியத்தையும், கலாச்சார விழுமியங்களையும் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதும் அயர்லாந்து முருகன் திருக்கோயில் நிர்வாகத்தினரின் தலையான பணியாக அமைகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27