வவுனியா முதிரைத்தோட்டம் ஸ்ரீ தேடிவந்த பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம்

04 Feb, 2026 | 09:01 AM
image

வவுனியா நகர் முதிரைத்தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேடிவந்த பிள்ளையார் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 08.02.2026 ஞாயிற்றுக்கிழமை காலை கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகப் பூர்வாங்க கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) காலை 8.00 மணிக்கு விநாயகப் பெருமான் வழிபாடு, புண்ணியாகவாசனம், அனுக்ஞை, மஹா கணபதி ஹோமம் மற்றும் லக்ஷ்மி ஹோமங்களுடன் ஆரம்பமாகவுள்ளன. அன்று மாலை 4.30 மணிக்கு கிராமசாந்தி, வாஸ்து சாந்தி கிரியைகளைத் தொடர்ந்து மஹா யாகாரம்பம், ஹோமங்கள் மற்றும் இரவு பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தனம் என்பன இடம்பெறவுள்ளன.

சனிக்கிழமை (07) காலை 7.00 மணி முதல் யாகபூஜைகளும், காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வும் நடைபெறும். அன்று மாலை பிம்பசுத்தி, விசேட திரவ்ய ஹோமம், ஸ்பர்ஷாகுதி, பூர்ணாகுதி, வேதபாராயணம் மற்றும் திருமுறை பாராயணங்கள் இடம்பெறவுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை யாகபூஜைகள் ஆரம்பமாகி, காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில், காலை 10.22 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகத் திருவிழாக்கள் ஆரம்பமாகும்.

சர்வதேச இந்துமத குரு பீடத்தின் வவுனியா மாவட்டத் தலைவர், வேதாகம கிரியா கலாநிதி சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாதக் குருக்கள் தலைமையில் இந்தக் கும்பாபிஷேகக் கிரியைகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில் சர்வதேச இந்து மத குரு பீடாதிபதி, சபரிமலை குருமுதல்வர் ஸ்ரீ ஐயபதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார், சிவஸ்ரீ மதனகோபால் குருக்கள், ஆலயக் குரு ஸ்ரீ நாகேந்திர சனாதன சர்மா, சிவஸ்ரீ கனகரூபக் குருக்கள் மற்றும் சாதகாசிரியர்களான குருசாமி சுந்தரசர்மா, ஸ்ரீ ஜெய கௌரிநாத சர்மா, ஸ்ரீ விக்னேஸ் சர்மா, ஸ்ரீ குகவரத சர்மா ஆகியோர் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08
news-image

புனித பிரிஜட் கொன்வென்ட்டின் 125ஆம் ஆண்டு...

2026-07-05 11:56:27
news-image

கொழும்பில் இடம்பெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது...

2026-07-05 12:58:18
news-image

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு:...

2026-07-03 09:45:08
news-image

நவாலி புனித பேதுரு பாவிலு ஆலய...

2026-06-30 16:20:16