கிரிபத்கொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!

04 Feb, 2026 | 08:59 AM
image

கிரிபத்கொடையில் சுமார் 3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயினைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும், போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேகநபரும் நேற்று செவ்வாய்க்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பு குறித்த விபரங்கள் வருமாறு,

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை வீதிப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று இடை மறிக்கப்பட்டது.

அதனைச் சோதனையிட்ட போது, அங்கிருந்து 3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், கிரிபத்கொடை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து ஒரு கையடக்கத் தொலைபேசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, இந்தப் போதைப்பொருள் தொகையை வழங்கிய பிரதான நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, கட்டுநாயக்க  பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 32 வயதுடைய தாய்லாந்து பிரஜை ஒருவர் இரண்டாவது சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச ரீதியில் இந்தப் போதைப்பொருள் கடத்தலுக்குத் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து கிரிபத்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியின் ஓலம்': எதிர்வரும் 14 -...

2026-08-08 17:44:05
news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36