புதுமுக நடிகர் லெனின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ரெட் லேபில் ' எனும் திரைப்படம்- புதுவிதமான திரைக்கதையால் ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவத்தை வழங்கும் என படக் குழுவினர் உறுதி அளித்துள்ளனர்.
இயக்குநர் கே. ஆர் . வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரெட் லேபில் ' எனும் திரைப்படத்தில் லெனின், அஸ்மின் , ஆர்.வி .உதயகுமார், அனு மோகன், முனிஸ்காந்த், தருண், கெவின், கார்மேகம், சசி, அனுஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கைலாஷ் மேனன் இசையமைத்திருக்கிறார். பீல் குட் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லெனின் தயாரித்துள்ளார்.
எதிர்வரும் ஆறாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் லெனின் பேசுகையில், '' 2023 ஆம் ஆண்டில் எழுத்தாளர்- கதாசிரியர் பொன் பார்த்திபன் சொன்ன கதை பிடித்திருந்தது. அதன் பிறகு நேரம் தவறாமையை கடைப்பிடித்ததால் இயக்குநர் கே. ஆர். வினோத்திற்கு இப்படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினேன். இப்படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவத்தை வழங்கும் '' என்றார்.
இதனிடையே தயாரிப்பாளரும், நடிகருமான லெனின் தன்னுடைய திரைப்படத் தயாரிப்பு அனுபவம் குறித்த விடயங்களை விழாவில் பகிர்ந்து கொண்டது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது என்பதும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM