யோகி டா படத்தில் எக்சன் காட்சிகளில் அசலாக நடித்திருக்கிறேன்' -  நடிகை சாய் தன்ஷிகா

Published By: Vishnu

04 Feb, 2026 | 06:12 AM
image

'கபாலி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை வென்ற நடிகை சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக - அதிரடியான எக்சன் நாயகியாக நடித்திருக்கும் 'யோகி டா ' எனும் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளில்  கடுமையாக உடற்பயிற்சி செய்து அசலாக நடித்திருக்கிறேன் என அப்படத்தின் நாயகியான சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள 'யோகி டா' எனும் திரைப்படத்தில் சாய் தன்ஷிகா, கபீர் துஹான் சிங், சாயாஜி ஷிண்டே, ராஜ்கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பூபதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபக் தேவ் மற்றும் அஸ்வமித்ரா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ மோனிகா சினி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி. செந்தில் குமார் தயாரித்திருக்கிறார். 

படத்தைப் பற்றி நடிகை சாய் தன்ஷிகா பேசுகையில், '' இந்தத் திரைப்படத்தில் எக்சன் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளது. 'பேராண்மை' படத்திற்காக முதன் முதலில் எக்சன் காட்சிகளின் நடிப்பதற்காக பயிற்சி பெற்றேன். அது இன்று வரை எமக்கு உதவியாக இருக்கிறது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள அனைத்து எக்சன் காட்சிகளிலும் நானே நடித்திருக்கிறேன்.

இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி வருகிறது. பெண்களை உடல் ரீதியாக துன்புறுத்தினால்.. அவர்களால் தொடர்ந்து முன்னேற முடியாது என நினைக்கின்றனர். அதைக் கடந்து வெற்றி பெற முடியும் என்பதை தான் இந்த படம் பேசுகிறது. பெப்ரவரி ஆறாம் திகதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தை அனைவரும் படமாளிகையில் கண்டு ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right