குருதி உறைவு பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன பரிசோதனை

Published By: Vishnu

04 Feb, 2026 | 04:08 AM
image

எதிர்பாராத தருணத்தில் ஏற்படும் விபத்தின் காரணமாகவோ அல்லது பல்வேறு திடீர் மருத்துவ காரணங்களாலோ ஆண், பெண், குழந்தைகள் என அனைவருக்கும் எந்த வயதிலும் ரத்த இழப்பு அல்லது ரத்தப்போக்கு ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்பின் போது நோயாளிகள் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து நிவாரணம் வழங்குவார்கள். இத்தகைய தருணத்தில் குருதி உறைதல் தொடர்பான பரிசோதனைக்காக த்ராம்போலாஸ்டோகிராபி எனும் நவீன பரிசோதனை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதய தொடர்பான சத்திர சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையின் போது குருதியின் அளவு,  குருதியின் தன்மையும் துல்லியமாக அவதானிக்கப்படவேண்டும். இத்தகைய தருணத்தில் ரத்த உறைவு அல்லது ரத்தப்போக்கு ஆகிய பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக த்ராம்போலாஸ்டோகிராபி எனும் நவீன பரிசோதனையை வைத்தியர்கள் மேற்கொள்கிறார்கள்.

இத்தகைய பரிசோதனையின் போது குருதியின் பண்புகளை மதிப்பிடவும், ரத்த உறைவு நோய் பாதிப்பிற்கான அறிகுறிகளை துல்லியமாக அவதானிப்பதற்கும் குருதி செலுத்துவது தொடர்பாக தடையில்லா நிலையை அவதானிப்பதற்கும் இத்தகைய பரிசோதனை அவசியமாகிறது.

ரத்தக் கசிவு என்ற பாதிப்பு உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். இந்நிலையில் இது தொடர்பான துல்லியமான அவதானிப்பை நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய த்ராம்போலாஸ்டோகிராபி எனும் பரிசோதனை உறுதிப்படுத்துவதால் இத்தகைய பரிசோதனை அவசியம் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

வைத்தியர் ஸ்ரீநித் குமார்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48