(நெவில் அன்தனி)
ஸிம்பாப்வே புலாவாயோ, குவீன்ஸ் கழக விளையாட்டரங்கில் று செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை 27 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இங்கிலாந்து, ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெற்றது.
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் முன்னாள் சம்பியன் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது இது மூன்றாவது தடவையாகும்.
1998இல் நடைபெற்ற இரண்டாவது அத்தியாயத்தில் உலக சம்பியனான இங்கிலாந்து, 2022இல் உப சம்பியனாகி இருந்தது.
அணித் தலைவர் தோமஸ் ரியூ மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி குவித்த சதம், கட்டுப்பாடான பந்துவீச்சகள் என்பன இங்கிலாந்தை வெற்றிபெறச் செய்தன.

அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஒலிவர் பீக் தனித்து போராடி சதம் குவித்த போதிலும் அது பயனற்று போனது.
இந்த வருடம் முதுல் தடவையாக தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர் பென் டோக்கின்ஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்த போதிலும் ஜோசப் முவர்ஸ் (25), பென் மேயஸ் (24) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சரி செய்து 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

இந் நிலையில் தோமஸ் ரியூ, காலெப் ஃபோக்னர் (40) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 135 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து இளையோர் அணியை பலப்படுத்தினர்.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தோமஸ் ரியூ 107 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 110 ஓட்டங்களைப் பெற்று 6ஆவதாக ஆட்டம் இழந்தார். (236 - 6 விக்.)
ரெல்பி அல்பர்ட் (15), பர்ஹான் அஹ்மத் (28 ஆ.இ.), செபஸ்டியன் மோர்கன் (15 ஆ.இ.) ஆகியோர் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.
பந்துவீச்சில் ஹேடன் ஷில்லர் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இலங்கை வம்சாவளி வீரர் நேடன் குறே 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
278 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 47.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
முதல் சுற்று, சுப்பர் சிக்ஸஸ் ஆகிய சுற்றுகளில் திறமையை வெளிப்படுத்திய வில் மலாசுக் இப் போட்டியில் வெறும் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து ஸ்டீவன் ஹோகன் (3) ஆட்டம் இழந்தார்.
இந் நிலையில் இலங்கை வம்சாவளி வீரர் நிட்டேஷ் செமுவல், அணித் தலைவர் ஒலிவர் பீக் ஆகிய இருவரும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கடெ;டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
நிட்டேஷ் செமுவல் வழமைபோல் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களைப் பெற்றார்.
அதன் பின்னர் அலெக்ஸ் லீ யங் (3), ஜேடன் ட்ரேப்பர் (12) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (134 - 5 விக.)

இதனைத் தொடர்ந்து ஒலிவர் பீக், ஆரியன் ஷர்மா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர்.
ஆனால், அவர்கள் இருவரும் 46 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஆரியன் ஷர்மா (34) ஆட்டம் இழந்தார்.
நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஹேடன் ஷில்லர் 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது களம் விட்டகன்றார்.
ஒரு பக்கத்தில் ஒலிவர் பீக் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினார்.
லம்ஸ்டென் வீசிய 16ஆவது ஓவரில் 6, 4, 4, 4, 4 என 22 ஓட்டங்களைக் குவித்த ஒலிவர் பீக்கினால் கடைசிப் பந்தில் ஒற்றையை எடுக்க முடியாமல் போனது.

அடுத்த ஓவரின் முதலாவது பந்தில் சார்ள்ஸ் லெச்மண்ட் (2) ஆட்டம் இழந்தார். ஒலிவர் பீக்குடன் 9ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களை லெச்மண்ட் பகிர்ந்தார்.
ஒலிவர் பீக் தனித்து போராடி 88 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட சரியாக 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
பந்துவீச்சில் ஜேம்ஸ் மின்டோ 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் செபஸ்டியன் மோர்கன் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரெல்ஃபீ அல்பர்ட் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மானி லம்ஸ்டென் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: தோமஸ் ரியூ











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM