இலங்கை மற்றும் பாகிஸ்தானிய மக்களுக்கிடையிலான நெருங்கிய உறவினை ஊக்குவிப்பதற்கும், பாகிஸ்தானில் உயர் கல்வியினை மேற்கொள்ளவிரும்புகின்ற  இலங்கை மாணவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காகவும்  இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் காரியாலயம் இலங்கையில் பாகிஸ்தானிய முன்னாள் மாணவர் சங்கத்தினை நிறுவவுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

 

பல்வேறு புலமைப்பரிசீல் திட்டங்களின் கீழ் இரு நாட்டு பல்கலைக்கழகங்களையும் இணைப்பதனை இவ்வமைப்பு நோக்காக கொண்டுள்ளது. 

இவ்வமைப்பின் ஊடாக அரச மற்றும் தனியார் துறைகள் போன்று, சிவில் சமூகமும் இரு நாடுகளினதும் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கும் தொடர்புகள் மற்றும் நிபுணத்துவ வாய்ப்புக்களை உருவாக்க முடியும்.

 

உறுப்பினர்கள் அவர்களின் கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளின் போது கற்றுக்கொண்ட விடயங்களை பகிர்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் இவ்வமைப்பின் நோக்கமாக காணப்படுகின்றது.

 

இம்முயற்சியானது இருதரப்பு பரிமாற்ற பயணங்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதுடன், இரு நாடுகளின் புதிய பட்டதாரிகளும் தங்களது கல்வி நடவடிக்கைகளை குறிப்பிட்ட நாடுகளில் மேற்கொள்வதற்கு முன், தேவையான வழிகாட்டல்கள், பயனுள்ள தகவல்கள் மற்றும் தொடர்புகளை பெற்றுக்கொள்ள உதவிபுரியும்.

 

பாகிஸ்தானில் நிபுணத்துவ தகைமை பெற்ற  அல்லது பாகிஸ்தானில் குறுகிய அல்லது நீண்ட கால  பயிற்சித் திட்டங்களை மேற்கொண்ட அனைத்து இலங்கை பிரஜைகளும் இவ்வமைப்பில் இணைவதற்கு தகுதியானவர்களாவர்.

 

சமூக சேவை, ஒன்றுகூடல்கள், எதிர்கால தலைமுறையினரை வழிகாட்டுதல் மற்றும் புதிய பறிமாற்ற பங்கேற்பாளர்களை இணைத்துக்கொள்ளுதல் மூலம் இருநாடுகளினதும் அபிவிருத்திக்கு அர்த்தமுள்ள பங்களிப்பினை இதன் மூலம் பெற்றுக்கொள் முடியும்.

 

மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் இணையதளமான http://www.pakistanhc.lk/pakistan-alumni-society-of-sri-lanka/. இல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

 

சரியான முறையில்  பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை  pahiccolombo@mofa.gov.pk  என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமோ அல்லது 0112055697 என்ற இலக்கத்திற்கு தொலைநகல் (பெக்ஸ்) மூலம் அனுப்ப முடியும்.