அவுஸ்திரேலியாவை சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் கிளென் டோனலி தனது பிறந்தநாளை விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்து கொண்டாடியுள்ளார்.

கிளென் டோனலி தனது 30வது பிறந்தநாளை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு சவாலை செய்ய வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி அவர், ஆடை எதுவும் அணியாமல் பறக்கும் விமானத்தில் இருந்து வயலின் இசைத்துக்கொண்டே குதித்துள்ளார்.

ஆண் உடல் அமைப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவரது தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டவும் இப்படி ஒரு சாகசத்தை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். வானத்தில் இருந்து குதிக்கும்போது எனக்கு உண்டாகும் பயமும், பதற்றமும் பிறர் முன் ஆடைகளை களையும்போதும் உண்டாகிறது. அவற்றில் இருந்து மீண்டு வர இன்னும் நான் முயன்று வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

தற்போது இவர் வயலின் வாசித்துக்கொண்ட விமானத்தில் இருந்து கீழே குதிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.