இன்றைய திகதியில் அலுவலகத்தில் பணியாற்றும் பெரும்பாலான ஆண்கள் தங்களின் வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக் கொண்டதால், அவர்களின் இயல்பான வளர்சிதை மாற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு அது நோயாக உருவெடுத்து, இதய நோய், பக்கவாதம் ஆகிய ஆபத்துகளை உருவாக்குகிறது.
Metabolic Syndrome எனப்படும் இத்தகைய பாதிப்பிற்கு பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இதன் காரணத்தினால் டைப் 2 சர்க்கரைநோய், உயர் குருதி அழுத்த நோய், உடற்பருமன் போன்ற பல்வேறு பாதிப்பிற்கும் ஆளாகிறார்கள்.
ஒவ்வொரு ஆணின் இடுப்பளவும் 90 சென்டி மீற்றருக்கு மிகாமலும், பெண்களின் இடுப்பளவு 80 சென்டி மீற்றருக்கு மிகாமலும் இருக்கவேண்டும். இவற்றுடன் இரத்த சர்க்கரையின் அளவு, கொழுப்பின் அளவு, இரத்த அழுத்த அளவு ஆகியவற்றையும் கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டும். இதனை அலட்சியப்படுத்தினால் அடிவயிற்றில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்துவிடும். மேலும் உடல் எடை அதிகரித்து, உடற் பருமன் பிரச்சனை தோன்றி, சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்த வியாதி ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்பு 6 மடங்கு அதிகரிக்கும். அத்துடன் இதய பாதிப்பு, பக்கவாதம், இன்சுலீன் சுரப்பியில் சமசீரற்றத்தன்மை, கல்லீரல் பாதிப்பு, கருப்பை பாதிப்பு என பலவகையான பாதிப்புகள் ஏற்படும்.
இதனை முற்றாகத்தடுக்கவேண்டும் என்றால் தினமும் 30 நிமிடத்திலிருந்து 60 நிமிடம் வரை உடற்பயிற்சியை செய்யவேண்டும். சரியான நேரத்திற்கு சத்தான உணவுகளை சாப்பிடவேண்டும். இதில் பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடையை சீராக பராமரிக்கவேண்டும். சிகரெட் பிடிப்பதை முற்றாக தவிர்க்கவேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் சர்க்கரையின் அளவையும், கொலஸ்ட்ராலின் அளவையும் சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
வைத்தியர் சுப்ரமணியம்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM