நுவரெலியா, ஹட்டன் பகுதிகளில் GOV PAY செயலி ஊடாக அபராதங்களை செலுத்தும் முறை அறிமுகம்

02 Feb, 2026 | 05:25 PM
image

நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியினூடாக இணைய வழியில் செலுத்தும் முன்னோடித் திட்டம் இன்று (02) ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் நுவரெலியா மாவட்ட பொலிஸ்  பொறுப்பதிகாரி, நுவரெலியா பிரதேச பொலிஸ்  பொறுப்பதிகாரி, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவினர், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திட்ட அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் அபராதம் செலுத்தத் தேவையான அனைத்து வசதிகளும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக நுவரெலியாவில் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸாருக்குரிய தேவையான  நவீன  உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இதில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக பணம் செலுத்தியதை உறுதிப்படுத்தும் தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன் பின்னர் பணம் செலுத்திய தகவல்கள்  உறுதிப்படுத்திய பின்னர் அவ்விடத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் வசதிகளைச் செய்துள்ளனர் .

இதன் மூலம் வாகன விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்படும் சாரதிகள் இனி அபராதம் செலுத்துவதற்காக அலுவலகங்களுக்குச் சென்று நேரத்தை விரயமாக்கவேண்டிய அவசியம் இல்லை எனவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

குறித்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரால் விதிக்கப்படும் அபராதத் தொகை தபால் அலுவலகத்திலேயே தற்போது செலுத்தப்படுகிறது. அபராதத்தை செலுத்தியதற்கான பற்றுச்சீட்டை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்ததன் பின்னரே சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப்பெறும் நிலை இருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-07 05:59:03
news-image

போக்குவரத்து, கல்வி, சுகாதாரத் துறைகளில் உள்நாட்டு...

2026-09-07 05:36:31
news-image

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் வசதிகளை...

2026-09-07 05:25:44
news-image

ஜனநாயகத்தை பாதுகாக்க ஐ.தே.க.வும் ஐ.ம.ச.வும் இணைந்து...

2026-09-07 05:21:43
news-image

பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே பிரேமலால் ஜெயசேகர...

2026-09-07 05:19:23
news-image

மக்களின் பறிக்கப்பட்ட இறைமையை எதிர்கால அரசாங்கம்...

2026-09-07 05:16:29
news-image

அநுர அரசாங்கத்தை பல தசாப்தங்களுக்கு யாராலும்...

2026-09-07 05:05:26
news-image

துப்பாக்கி இயங்காமையால் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்...

2026-09-07 00:41:12
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான...

2026-09-07 00:38:06
news-image

ஜனாதிபதியின் பிறந்த ஊரில் சுற்றாடல் அழிவு:...

2026-09-06 12:33:31
news-image

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சோம் : மனோ...

2026-09-06 12:33:56
news-image

தேசிய செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை நடைமுறைப்படுத்த...

2026-09-06 12:34:33