பிளசன்டா ப்ரிவியா எனும் நஞ்சுக்கொடி பாதிப்பிற்குரிய சிகிச்சை

02 Feb, 2026 | 04:08 PM
image

கருத்தரித்திருக்கும் பெண்மணிகளுக்கு சில தருணங்களில் வைத்திய காரணங்களால் சிசேரியன் சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெறும். இதற்கான பல்வேறு காரணங்களில் பிளசன்டா ப்ரிவியா என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் நஞ்சுக்கொடி பாதிப்பும் ஒன்று. இது தொடர்பாக வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.

பெண்கள் பேறு காலத்தில் நஞ்சுக்கொடி கருப்பையின் திறப்பை அதாவது வாய்பகுதியை முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ மூடும் போது ஏற்படும் ஒரு சிக்கல்தான் பிளசன்டா ப்ரிவியா எனப்படும் பாதிப்பு ஆகும்.

கருவுற்றிருக்கும் தருணத்தில் கருப்பையில் உருவாகும் ஒரு உறுப்பு தான் பிளசன்டா எனும் நஞ்சுக்கொடி.  பெரும்பாலான தருணங்களில் இந்த பிளசன்டா கருப்பையின் மேற்பகுதி அல்லது பக்கவாட்டில் இணையும். இது இயல்பானது.

ஆனால் சிலருக்கு இத்தகைய பிளசன்டா கருப்பையின் கீழ்ப்பகுதியில் இணைந்து விடும். இதனால் பிளசன்டா கருப்பை வாய் பகுதியின் திறப்பை பகுதியளவோ அல்லது முழுமையாகவோ மறைக்கக் கூடும். இது பிரசவ தருணங்களிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ கடுமையான ரத்தப் போக்கை ஏற்படுத்தி அச்சத்தை உண்டாக்கிவிடும்.

பிளசன்டா என்பது தாயின் வயிற்றில் சிசு உருவாகி இருக்கும் போது அந்த சிசுவுக்கு தேவையான ஓக்சிஜன் மற்றும் ஊட்டசத்து வழங்குவதற்கும், கழிவுகளை அகற்றுவதற்கும் ஆதாரமாக செயல்படுகிறது.

இத்தகைய சிக்கல் சில பெண்களுக்கு மட்டுமே இயல்பாக சரியாகும். பெரும்பாலானவர்களுக்கு இது பிரசவ தருணங்களில் கடுமையான சிக்கலை ஏற்படுத்தி விடும். இதனால் சிசேரியன் எனப்படும் சத்திர சிகிச்சையிலான பிரசவம் அவசியமாகிவிடும்.

கருத்தரித்து இருபது வாரத்திற்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படுவது தான் இத்தகைய பாதிப்பின் முதன்மையான அறிகுறியாகும். சிலருக்கு இத்தகைய தருணங்களில் புள்ளிகள் தோன்றக்கூடும். இது பிரசவத்திற்கு முன் கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தி இரத்த போக்கை உண்டாக்கும். அத்துடன் வலியையும் ஏற்படுத்தும்.

இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பை- சிக்கலை துல்லியமாக அவதானித்து, சிசுவின் வளர்ச்சியை பொறுத்து சிசேரியன் மூலமாக பிரசவமோ அல்லது பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணமோ அளிப்பார்கள்.

வைத்தியர் ஸ்ரீ தேவி தொகுப்பு அனுஷா.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48