முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று மேற்கினை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான  துரைசிங்கம் நிசாந்தன் (34) என்பவர் இன்று காலை உழவியந்திரத்திரத்தின் மட்காட்டில் இருந்து தவறுதலாக வீழ்ந்ததில் தலையின் பின்பக்கத்தில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தண்ணீரூற்று புதறிகுடா பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவரது சடலம் மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு வீதிபோக்குவரத்து பிரிவு பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவர் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் சமூர்த்தி திட்டபிரிவில் பணியாற்றும் பணியாளராவார். உழவு இயந்திரம் ஓட்டிச்சென்ற நபர் பொலிஸாரின் விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளார்.