பாலியல் சாமியாருக்கு நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தீர்ப்பு

Published By: Robert

30 Aug, 2017 | 10:30 AM
image

பாலியல் துஷ்­பி­ர­யோக  வழக்கில்  கைதான சாமியார்   குர்மீத் சிங்­குக்கு  இரு வழக்­கு­களில் தலா 10 ஆண்­டுகள் என மொத்தம் 20 ஆண்­டுகள் கடூழிய சிறைத்தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.  இவ் வழக்கில் கொடிய மிரு­கத்­திற்கு எல்லாம் கருணை கிடை­யாது என சி.பி.ஐ. நீதி­மன்றம் தெரி­வித்­துள்­ளது.

இரு­பெண்கள் பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்ட வழக்கில் ‘தேரா சச்சா சவுதா' மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் சிங்­கிற்கு 20 ஆண்­டுகள் கடுங்­காவல் சிறைத்­தண்­டனை விதித்து சி.பி.ஐ. நீதி­மன்றம்  தீர்ப்பு வழங்­கி­யது. இந்த தீர்ப்பை கேட்­டதும் அங்கே நின்­றி­ருந்த குர்மீத் சிங் கண்ணீர் விட்டு கத­றினார். தனக்கு மன்­னிப்பு வழங்­கு­மாறு கரம் கூப்பி நீதி­ப­தி­யிடம் அவர் வேண்­டிக்­கொண்­ட­துடன் அந்த அறையை விட்டு நக­ரவும் மறுத்­த­தாக சிறை அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்­நீ­தி­மன்­றத்தில் முறை­யி­டப்­போ­வ­தாக குர்மீத் சிங் கூறி உள்ளார்.

 இதேவேளை தீர்ப்பு வழங்­கிய நீதி­பதி ஜக்தீப் சர்மா “குற்­ற­வாளி (குர்மீத் சிங்), தன்னை கடவுள் என்று பின்­பற்­றிய பக்­தர்­களை கூட விட­வில்லை. மனி­த­நேயம் பற்றி கவலை கொள்­ள­வில்லை. குற்­ற­வா­ளி­யிடம் இயற்­கை­யா­கவே கருணை என்­பது கிடை­யாது. இது அவ­ரு­டைய நட­வ­டிக்­கையின் மூலமே தெரி­கி­றது. இது­போன்ற குற்­ற­வாளி நீதி­மன்­றத்தில் இருந்து எந்­த ­ஒரு கரு­ணையும் எதிர்­பார்க்கக்கூடாது. குற்­ற­வாளி மிகவும் கொடிய மிரு­கத்­தை­ப்போன்று நடந்துக் கொண்­டுள்ளார் எந்­த­ ஒரு கரு­ணையும் கிடை­யாது என கூறி­விட்டார். 

பாலியல் துஷ்பிரயோகம் என்­பது உடல் ரீதி­யான தாக்­குதல் மட்டும் கிடை­யாது அது பாதிக்­கப்­பட்ட பெண்ணின் ஒட்­டு­மொத்த நல­னையும் அழித்­து­வி­டு­கி­றது என்ற  உச்­ச­நீ­தி­மன்ற தீர்ப்பை குறிப்­பிட்ட சி.பி.ஐ. நீதி­மன்றம், இவ்­வ­ழக்கில் பாதிக்­கப்­பட்ட பெண்கள் தேரா தலை­வரை கடவுள் என ஏற்றுக் கொண்­டுள்­ளனர்.  

அது­ப­டியே பின்­பற்றி உள்­ளனர். இருப்­பினும், குற்­ற­வாளி (குர்மீத் சிங்) அப்­பாவி பக்­தர்கள் மீது பாலியல் வன்­கொ­டுமை தாக்­கு­தலை நடத்­தியுள்ளார், கடும் விளை­வு­களை சந்­திக்க நேரிடும் என பாதிக்­கப்­பட்ட பெண்­களை மிரட்­டி­யுள்ளார், இது­போன்ற குற்­ற­வாளி எந்­த­ ஒரு கரு­ணை­யையும் எதிர்­பார்க்க முடி­யாது என ­தெ­ரி­வித்­தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17