புதிய அலை கலை வட்டம் நடத்திய கலாமித்ரா விருது விழா கடந்த வெள்ளிக்கிழமை (11), செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் மாலை இடம்பெற்றது.
அமைப்பின் நிறுவனரும் கலைஞரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ராதாமேத்தா நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். பிரதம அதிதியாக ஹாசிம் உமர் பவுண்டேஷன் நிறுவனர் ஹாசிம் உமர் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
தமிழகத்தில் இருந்து இந்நிகழ்வுக்காக வருகை தந்த அதிதி பிரபல தொழில் அதிபர் பி.ஆறுமுகபாண்டியனுக்கு இந் நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மற்றுமெரு கெளரவ அதிதியான தமிழக சூரிய வைத்தியசாலையின் பிராந்திய இயக்குநர் பி.கே. சரவணன் சமூகக் காவலர் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இவ்விருது நிகழ்வுக்காக நடத்தப்பட்ட கலை கலாசாரப் போட்டிக ளில் வெற்றிபெற்ற 25 பேருக்கும் கலை, இலக்கிய துறைசார்ந்த பத்து துறைகளில் தலைசிறந்த 10 பேருக்கு கலாமித்ரா விருதும் சமூக, மற்றும் பொது நலப்பணிகளில் பெரிதும் பங்காற்றி வரும் 15பேருக்கு சிறப்பு விருகளும் வழங்கப்பட்டன மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.






























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM