இந்த ஆண்டில் மாகாணசபை தேர்தலுக்கு சாத்தியமில்லை - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

01 Feb, 2026 | 11:50 AM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமற்றது. இருப்பினும் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தித்வா தாக்கத்தின் பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற குழுக்கூட்டத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாகாணசபைத் தேர்தலை நடத்தவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவுப்படுத்த வேண்டும்.

மாகாணசபைத் தேர்தலை எந்த தேர்தல் முறைமையில் நடத்துவது என்பது தொடர்பில், ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைக்கும் குழுவுக்கு ஆளும் தரப்பில் இருந்து இன்னும் பெயர் பரிந்துரைகள் முன்வைக்கப்படவில்லை' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மாகாணசபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு விரைவில் தீர்வுக் காணப்படும்.அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சகல தரப்பினருடன் கலந்துரையாடி முரண்பாடற்ற தீர்வினை எடுக்க வேண்டும்.

எவ்வாறாயினும் இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது.தித்வா புயல் தாக்கத்தின் பின்னர் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும்  என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்  இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்துக்குள் மாகாணசபை தேர்தலையும் உள்ளடக்குங்கள். அப்போது பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை படுகொலைகள் : சுயாதீன...

2026-09-09 19:48:51
news-image

இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE...

2026-09-09 20:38:55
news-image

முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு...

2026-09-09 20:34:08
news-image

வாகன இலக்கத் தகடு தட்டுப்பாட்டுக்கு 6...

2026-09-09 16:01:03
news-image

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்திய...

2026-09-09 19:59:59
news-image

எல் நினோ தாக்கத்தால் நாட்டில் 8...

2026-09-09 19:41:21
news-image

இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் ஜனாதிபதியின்...

2026-09-09 19:40:19
news-image

பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான சட்டவிரோத...

2026-09-09 19:26:29
news-image

நேபாள வெள்ளப்பெருக்கு : மீட்புப் பணிகளுக்காக...

2026-09-09 18:18:38
news-image

தென்னேகும்புறையில் கடைகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கு...

2026-09-09 19:45:33
news-image

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின்...

2026-09-09 17:44:50
news-image

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் புதிய சீனத் தூதுவருக்கும்...

2026-09-09 17:44:10