மாகாணசபைத் தேர்தல் குறித்து விசேட கவனம் எதிர்க்கட்சியின் நாளைய பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும்; கயந்த கருணாதிலக்க அறிவிப்பு

01 Feb, 2026 | 10:30 AM
image

(இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாளை கூடவுள்ள எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம்பிரயோகித்தல் மற்றும் பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாராளுமன்ற அமர்வு நாளை மறுதினம்( செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில் அந்த வாரத்துக்குரிய விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற குழு கூட்டம் நாளை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது மாகாணசபைத் தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கும், பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஆராயப்படவுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவோம். பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சிகளை விட ஆளும் தரப்பினரே அதிக அக்கறை கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாக வெளிப்படுகிறது.

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதனை  ஏற்றுக்கொள்ளும் மனோநிலை ஆளுங்கட்சிக்கு கிடையாது. புதிய கல்வி மறுசீரமைப்பில் காணப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டினோம்.இறுதியில் நாங்கள் தான் புதிய கல்விக் மறுசீரமைப்பை பிற்போட்டோம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.இது அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத்...

2026-04-12 14:32:14
news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38
news-image

புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-12 11:42:41
news-image

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : ஒரே...

2026-04-12 11:29:19
news-image

நிலக்கரி தொடர்பான மேலதிக செலவுகளை நுகர்வோரிடமிருந்து...

2026-04-12 11:47:49
news-image

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு...

2026-04-12 10:44:49
news-image

விமான நிலையத்தில் அலங்கார செடிகள் கைப்பற்றல்:...

2026-04-12 10:40:56
news-image

புத்தாண்டு காலத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து...

2026-04-12 11:41:49