மௌனிக்கப்படுகிறதா ஜனநாயக உரிமை?

01 Feb, 2026 | 10:00 AM
image

நாட்டில் மாகாண சபை தேர்தல் எப்­போது நடை­பெ­று­மென்­பது தொடர்­பான விட­யங்கள் தற்­போது தொடர்ச்­சி­யாக பல்­வேறு தரப்­பி­ன­ராலும் பேசப்­பட்டு வரு­கின்­றன. இது தொடர்­பாக தற்­போது பல சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. அதா­வது தற்­போ­தைய சூழலில் மாகாண சபை தேர்தல் நடக்­குமா இல்­லையா என்­பது ஒரு பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது. அர­சாங்கம் எந்த கார­ணத்தை கொண்டும் மாகாண சபை தேர்­தலை நடத்­தாது என்றும் அதற்கு தோல்வி பயம் ஏற்­பட்­டு­விட்­டது என்ற தொனி­யிலும் எதிர்க்­கட்­சிகள் கருத்­துக்­களை வெளி­யிட ஆரம்­பித்­து­விட்­டன.

அதே­போன்று ஆளுங்­கட்­சியை பொறுத்­த­வ­ரையில் மாகாண சபை தேர்தல் இவ்­வ­ருட இறு­தியில் அல்­லது அடுத்த வருட ஆரம்­பத்தில் நடக்கும், நாங்கள் தேர்­த­லுக்கு அச்­சப்­ப­ட­வில்லை, தேர்தல் முறை தொடர்­பான குழப்­பமே தேர்தல் தாம­தத்­துக்கு காரணம், எனவே தற்­போது பாரா­ளு­மன்ற விசேட குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அதன் அடிப்­ப­டையில் விட­யங்கள் ஆராய்ந்து தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்டு உரிய நேரத்தில் தேர்தல் நடத்­தப்­படும் என்று தெரி­வித்து வரு­கி­றது.

ஆனால் பொது­வாக அர­சி­யலில் அக்­கறை கொண்­டி­ருப்போர் வெளி­யி­டு­கின்ற கருத்­துக்­களை பார்க்­கும்­போது மாகாண சபை தேர்தல் நடக்­குமா என்ற ஒரு கேள்வி எழு­கின்­றது. இதற்கு பல்­வேறு கார­ணங்கள் தற்­போது முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அதா­வது தற்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் ஜே.வி.பி-.யை பிர­தா­ன­மாக கொண்­டது. இந்த கட்­சியின் 2024-ஆம் ஆண்டு தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்­தப்­படும் என்று வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனாலும் இந்த கட்­சியின் கடந்­த­கால நிலைப்­பா­டு­களை எடுத்து நோக்கும் போது மாகாண சபை தேர்தல் நடத்­தப்­ப­டுமா என்­பது தொடர்­பான சந்­தேகம் ஏற்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

காரணம் கடந்த 50 ஆண்டு அர­சியல் வர­லாற்றில் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யா­னது மாகாண சபை முறை­மையை எதிர்த்தே வந்­தி­ருக்­கி­றது. எனினும் கடந்த 10 வரு­ட­கா­லங்­களில் மாகாண சபை தேர்தல் தொடர்­பாக அவர்­க­ளது நிலைப்­பாட்டில் ஒரு சிறிய தளர்வை காண முடிந்­தது. அதா­வது ஆரம்ப காலத்தை போன்று மிகப்­பெ­ரிய அளவில் எதிர்க்கும் நிலைப்­பாடு கடந்த 10 வரு­டங்­களில் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யிடம் காணப்­ப­ட­வில்லை. ஆனாலும் அதற்கு முன்­ன­ரான காலப்­ப­கு­தியில் மாகாண சபை முறை­மையை மக்கள் விடு­தலை முன்­னணி கடு­மை­யாக எதிர்த்தே அர­சியல் செய்து வந்­தி­ருக்­கின்­றது.

அப்­படி கடந்த 50 வருட கால­மாக இந்த மாகாண சபை முறை­மையை எதிர்த்த ஒரு அர­சியல் கட்சி தற்­போது அதி­கா­ரத்தில் இருக்­கி­றது. எனவே அந்தக் கட்சி மாகாண சபை தேர்­தலை நடத்­துமா என்ற கேள்­வியை பலரும் எழுப்­பு­கின்­றனர். அது தற்­போது மாகாண சபை தேர்தல் தாம­தப்­ப­டுத்­தப்­படும் போது மேலும் பர­வ­லாக பேசப்­ப­டு­கின்ற ஒரு விட­ய­மாக பரி­ணாமம் பெறு­கி­றது.

எனினும் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவை பொறுத்­த­வ­ரையில் மாகாண சபை முறை­மையை அவர் ஒரு­போதும் எதிர்த்து பேசி­ய­தில்லை. அவர் அது அவ­சி­ய­மற்­றதோ அல்­லது அது நீக்­கப்­படும் என்றோ பேசி­ய­தாக அண்­மைக்­கால வர­லாற்றுப் பதி­வுகள் இல்லை. அது­மட்­டு­மன்றி அவர் மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்ந்து கொண்டு செல்­லப்­படும், தேர்தல் உரிய நேரத்தில் நடத்­தப்­படும் என்ற வகை­யான கருத்­துக்­க­ளையே கடந்த காலங்­களில் தெரி­வித்து வந்­தி­ருக்­கிறார். அதனால் மாகாண சபை தேர்­தலை அர­சாங்கம் நடத்தும் என்ற ஒரு நம்­பிக்­கையும் காணப்­ப­டு­கி­றது.

ஆனாலும் தற்­போது இந்த தாம­தங்­களை பார்க்கும் போது எங்கே தேர்தல் நடத்­தப்­ப­டுமா என்ற ஒரு கேள்வி எழு­வதை தவிர்க்க முடி­யா­துள்­ளது.

மாகாண சபை தொடர்பில் அர­சாங்கம் கடந்த காலங்­களில் எவ்­வா­றான நிலைப்­பாட்­டையும் கொண்­டி­ருந்­தி­ருக்­கலாம், அர­சியல் ரீதி­யாக இந்த நிலைப்­பாடு இருந்­தி­ருக்­கலாம். எனினும் தற்­போது மாகாண சபை முறைமை என்­பது ஏன் கொண்டு வரப்­பட்­டது, அதன் நோக்கம் என்ன என்­பது தொடர்­பாக அர­சாங்கம் சிந்­தித்து பார்க்க வேண்டும்.

அர­சியல் ரீதி­யாக எவ்­வா­றான நிலைப்­பா­டுகள் அர­சாங்­கத்­துக்கு இருந்­தாலும் மாகாண சபை முறை­மை­யா­னது இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை தீர்ப்­ப­தற்­காக, அவர்­க­ளது அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வ­தற்­காக முன்­வைக்­கப்­பட்ட ஒரு முறை­மை­யாகும் என்­பதை மறக்கக் கூடாது. அந்த முறை­மை­யினால் தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள் கடந்த காலங்­களில் அல்­லது இது­வரை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்­பது யதார்த்தம் தான்.

ஆனால் அதற்­காக அந்த முறை­மையை இழந்து விடு­வ­தற்கு தமிழ் பேசும் மக்கள் தயா­ராக இல்லை. அதனை தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வுக்­கான ஒரு ஆரம்­ப­மாக எடுத்துக் கொள்ள முடியும் என சக­லரும் கூறு­கின்­றனர்.

கடந்த கால அனு­ப­வங்­க­ளின்­படி மாகாண சபை முறை ஊடாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் முத­ல­மைச்­சர்­க­ளினால் முழு­மை­யாக, சுதந்­தி­ர­மாக செயற்­பட முடி­ய­வில்லை என்ற ஒரு கருத்தும் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் இது தொடர்­பாக பல்­வேறு கட்­டங்­களில் பல விளக்­கங்­களை அளித்­தி­ருக்­கிறார்.

எப்­ப­டி­யி­ருப்­பினும் மாகாண சபை தேர்தல் எந்த அடிப்­ப­டை­யி­லா­வது நடத்­தப்­பட வேண்டும். தற்­போது மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்­பான ஒரு குழப்­பமே தேர்தல் தாம­திக்­கப்­ப­டு­வ­தற்கு காரணம் என்று அர­சாங்க தரப்பில் தாம­தத்­திற்­கான காரணம் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் மிகவும் எளி­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாணக்­கியன் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைத்­தி­ருக்­கின்ற தனி­நபர் பிரே­ர­ணையை நிறை­வேற்­றினால் அடுத்த மாதமே மாகாண சபை தேர்­தலை பழைய முறையில் நடத்த முடியும்.

ஆனாலும் தற்­போது அர­சாங்கம் எந்த முறையில் இந்த தேர்­தலை நடத்­து­வது என்­பது தொடர்­பாக ஆராய்­வ­தற்கு ஒரு பாரா­ளு­மன்ற விசேட குழுவை நிய­மித்­தி­ருக்­கி­றது. அந்த குழு­வுக்கு இன்னும் உறுப்­பி­னர்கள் பெய­ரி­டப்­ப­ட­வில்லை.

2017-ஆம் ஆண்டு இந்த மாகாண சபை தேர்தல் முறை முழு­மை­யாக விகி­தா­சார முறை­யி­லி­ருந்து கலப்பு முறைக்கு மாற்­றப்­பட்­டது. 50 வீத விகி­தா­சார முறை, 50 வீத தொகுதி முறை என்ற ரீதியில் இந்த தேர்தல் முறை மாற்­றப்­பட்­டது.

எனினும் அதற்­கேற்ப உரு­வாக்­கப்­பட்ட எல்லை நிர்­ணய அறிக்கை அப்­போது பாரா­ளு­மன்­றத்­தினால் ஏக­ம­ன­தாக நிரா­க­ரிக்­கப்­பட்­டதால் தான் இந்த தேர்தல் முறை தொடர்பில் ஒரு சிக்கல் ஏற்­பட்­டது. எந்த முறையில் தேர்தல் நடத்­து­வது என்­பது தொடர்­பான குழப்பம் ஏற்­பட்­டது. தற்­போ­தைய புதிய முறை­மை­யி­லேயே தேர்­தலை நடத்­து­வ­தாயின் மீண்டும் எல்லை நிர்­ணய அறிக்கை தயா­ரிக்­கப்­பட வேண்டும். அதற்கு மிக அதிக காலம் எடுக்கும்.

இங்கு முக்­கி­ய­மான விடயம் என்­ன­வென்றால் ஜன­நா­யக சமூ­கத்தில் மக்­களின் வாக்­கு­ரிமை உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மாகாண சபை முறைமை என்­பது இலங்கை அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்ற, உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்ற ஒரு அடிப்­படை அம்­ச­மாகும்.

எனவே அதற்கு ஏற்ற முறையில் உரிய நேரத்தில் தேர்­தல்­களை நடத்தி மக்­களின் ஜன­நா­யக உரி­மையை, இறை­யாண்மை உரி­மையை உறு­திப்­ப­டுத்­து­வது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். அதனை யாரும் தாம­தப்­ப­டுத்­தவோ அல்­லது அதனை வலு­வி­ழக்கச் செய்­யவோ முடி­யாது.

அரசாங்கம் இந்த விடயத்தில் விரைவாக தீர்மானம் எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி விரைந்து ஏதோ ஒரு முறையில் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்துவோம் நடத்துவோம் என்று கூறி காலத்தை இழுத்தடிக்காமல் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை இலங்கை மக்கள் மட்டுமல்ல, அந்த முறைமையை கொண்டு வருவதற்கு உதவி வழங்கிய இந்தியா மற்றும் சர்வதேச சமூகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இலங்கை எப்படி இந்த ஜனநாயக உரிமையை பிரயோகிக்கிறது என்பதை சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதனால் இதனையும் கருத்திற்கொண்டு உறுதியான தீர்மானத்தை விரைவில் சகல தரப்பினரும் இணைந்து எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு துருவ நிலைப்பாட்டினை இல்லாதொழிக்க வழி...

2026-02-08 07:13:22
news-image

மௌனிக்கப்படுகிறதா ஜனநாயக உரிமை?

2026-02-01 10:00:29
news-image

அரசியல் தீர்வு திட்டவரைவை ஒன்றிணைந்து தயாரிக்க...

2026-01-25 11:17:06
news-image

இனியும் காலதாமதம் வேண்டாம்

2026-01-04 14:25:10
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அழுத்தம்...

2025-12-28 12:29:59
news-image

பாதுகாப்பான பகுதிகளில் மக்களை குடியேற்ற வேண்டும்

2025-12-14 14:48:36
news-image

இந்தியாவின் உடனடி உதவியும் இணைந்த செயற்பாட்டின்...

2025-12-07 16:13:55
news-image

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதயசுத்தியான செயற்பாடு தேவை

2025-11-30 10:32:53
news-image

இன, மத­வா­தத்­துக்கு அர­சாங்கம் ஒரு­போதும் அடி­ப­ணியக்...

2025-11-23 14:17:58
news-image

அடிப்படைத் தீர்வையாவது பெறுவதற்கு முயலவேண்டும்

2025-11-09 16:18:30
news-image

அரசியல்தீர்வு விடயத்தில் அக்கறைகொள்ள வேண்டும்

2025-11-02 14:47:15
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகள் யதார்த்தத்தை உணர...

2025-10-26 14:09:27