நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

31 Jan, 2026 | 04:16 PM
image

எம்மில் சிலருக்கு நடுக்கத்துடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டாலோ அல்லது ரத்த வாந்தி எடுத்தாலும் உடனடியாக உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சையும், அவசர சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இவை நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு நிலையாக இருக்கக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

சோர்வு, அரிப்பு, தோல் மற்றும் கண்களில் நிறமாற்றம், கணுக்கால் மற்றும் கால் வீக்கம், வயிற்று வலி, குமட்டல், காய்ச்சல், சிறுநீர் நிறமாற்றம், பசியின்மை, தூக்கமின்மை, திடீர் எடை குறைவு ,மாதவிடாய் தருணங்களில் மயக்கமும், மனக் குழப்பமும் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்... உங்களுடைய கல்லீரலின் செயல்பாட்டில் பாரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதனை உணர்ந்து உடனடியாக வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு நிலையாகும். இத்தகைய பாதிப்பு ஹெபடைடிஸ் மற்றும் அதீத மது பாவனை காரணமாக ஏற்படக்கூடியதாகும். சிலருக்கு இத்தகைய பாதிப்பு அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் கல்லீரல் சுருக்க பாதிப்பாக உண்டாகும். சிலருக்கு இத்தகைய கல்லீரல் சுருக்க பாதிப்பு அதிகமாகி, அவர்களுடைய கல்லீரல் செயவிழக்கத் தொடங்கும். இவை நாட்பட்ட பாதிப்பாகவும் தொடரும்.

இத்தகைய தருணங்களின் போது நோயாளிகளுக்கு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க சி டி ஸ்கேன், எம் ஆர் எஸ் ஸ்கேன் போன்ற நவீன பரிசோதனைகளை மேற்கொள்வர். இதன் அடிப்படையில் பிரத்யேக ஒருங்கிணைந்த சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை ஆகியவற்றை வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள். இத்தகைய சத்திர சிகிச்சையின் வெற்றி வீதம் நோயாளியின் உயிரிழப்பை ஐந்து முதல் இருபது ஆண்டுகள் வரை ஒத்தி வைக்க கூடும் வகையில் தற்போது நவீன மருத்துவ தொழில்நுட்ப உத்திகள் கையாளப்படுகிறது. அதே தருணத்தில் மது பாவனையை முற்றாக தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு வாழ்வியல் நடைமுறைகள் குறித்து வைத்தியர்கள் பரிந்துரைப்பர். இதனை உறுதியாக மேற்கொண்டால் இத்தகைய பாதிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.‌

வைத்தியர் முத்துக்குமார்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூட்டு வலியை நீக்கும் நவீன சிகிச்சை

2026-02-13 15:53:59
news-image

இதய செயலிழப்பை ஏற்படுத்தும் பொலிசித்தீமியா..!?

2026-02-12 14:42:46
news-image

ஒவ்வாமையினால் ஏற்படும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2026-02-11 17:03:30
news-image

கேண்டிடியாசிஸ் எனும் பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

2026-02-10 15:00:08
news-image

ஓட்டோஸ்கிளிரோசிஸ் எனும் கேட்கும் திறன் பாதிப்பிற்குரிய...

2026-02-09 18:19:16
news-image

சுப்பீரியர் வேனா காவா சிண்ட்ரோம் எனும்...

2026-02-07 15:10:23
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-02-06 17:07:16
news-image

மன அழுத்தத்தை குறைக்கும் நவீன சிகிச்சை

2026-02-05 15:27:13
news-image

கோசிடினியா எனும் வால் எலும்பு வலி...

2026-02-04 15:21:40
news-image

குருதி உறைவு பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும்...

2026-02-04 04:08:54
news-image

பிளசன்டா ப்ரிவியா எனும் நஞ்சுக்கொடி பாதிப்பிற்குரிய...

2026-02-02 16:08:16
news-image

நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு நோய் பாதிப்பிற்குரிய...

2026-01-31 16:16:40