அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் மாகாண சபை தேர்தல் (திருத்த) சட்டமூலம் அல்லது 20 ஆவது  அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத் துக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்க ளும் எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படவுள்ளன. இதனை நேற்று உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில,  சுதந்திரமான  நீதியான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் அல்லது பெப்ரல் அமைப்பு,  அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, மக்கள் ஐக்கிய முன்னணியின் செயலாளர் திஸ்ஸ காமினி அபேசிங்க ஜயவர்தன யாப்பா,  மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் ஆகிய தரப்பினர் சார்பாக தாக்கல்  செய்யப்பட்ட மனுக்கள் அன்றைய தினம் உயர் நீதிமன்றினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இந்த மனுக்கள் அனைத்தும் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதியரசர்களான அனில் குணரத்ன,  விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

மாகாண சபைத் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்காக கொண்டு வரப்பட வுள்ள 20 ஆவது திருத்தச் சட்டமுலம் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்பதால்  விசேட சட்ட வியாக்கியானத்தை வழங்கு மாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதிவாதி யாக சட்டமா அதிபர் பெயரிடப்பட் டுள்ளார்.