Study World Lanka Campus மூலம் UK – Malta இணைப்பட்ட பட்டப்படிப்புகள் இலங்கையில் !

Published By: Digital Desk 1

31 Jan, 2026 | 10:59 AM
image

எஸ்.ரிலீவரன்

Study World Lanka Campus இன் மால்டாவின் 3வது பட்டப்படிப்பு திட்டங்களின் உத்தியோகபூர்வ வெளியீட்டு விழா கொழும்பு –நுகேகொடையில் வெள்ளிக்கிழமை (30) காலை நடைபெற்றது.

அதில், Study World Lanka Campus இன் உயர்கல்விக்கான புதிய சகாப்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், மாணவர்களுக்கு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஐரோப்பிய இளங்கலைப் பட்டப்படிப்புகளை இலங்கையில் தொடரக்கூடிய வாய்ப்புக்கள்குறித்தும் தெளிவுப்படுத்தப்பட்டது.

Study World Lanka Campus ஆனது துடிப்பான ஒரு அமைப்பாக திகழ்வதோடு,  உலகம் முழுவதும் அதன் இருப்பு வளர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் தலைமை அலுவலகம் துபாயில் அமைந்துள்ளதுடன் கிளை வளாகங்கள் ஐரோப்பா (மால்டா), இந்தியா, சவுதி அரேபியா மற்றும்  இலங்கை போன்ற நாடுகளில் உள்ளன. 

Study World Lanka Campus ஆனது University Of Greater Manchester UK பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட ஒருகல்வி நிறுவனமாகும்.

இந்த நிகழ்வில் Study World Lanka Campus நிறுவனத்தின் இலங்கை கிளையின் செயல்பாட்டுத் தலைவர் பாலாஜி ஜெகதீஸன் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில், 

இந்த நிறுவனமானது, உலகளவில் நாடுகடந்த கல்வியை வழங்குவதில் குறிப்பிடத்தக்க அனுபவத்தைக் கொண்ட மதிப்புமிக்க ஸ்டடி வேர்ல்ட் எஜுகேஷன் ஹோல்டிங் லிமிடெட்டின் ( study world education holding Ltd) ஒரு பகுதியாகும். Study World Lanka Campus நவீன கற்பித்தல் உதவிகள் மற்றும் மாணவர்களுக்கான சிறந்த சூழலில் கல்வியை பெறுவதற்குவசதியான கற்றல் பகுதியுடன் நன்கு அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பொறியியல், வணிகம், கணக்கியல் மற்றும் கணினி உள்ளிட்ட பல துறைகளின் மூலம் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றுக்கொள்ள முடியும். கல்வி உள்கட்டமைப்பு சேவை வழங்குநராக இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மிகவும் வெற்றிகரமான UK கிளை வளாகங்களை வளர்ப்பதற்குப்பொறுப்பாகவும் இது அமைந்துள்ளது. இதனுடன், ஸ்டடி வேர்ல்ட் இந்தியா, இலங்கை, ஐரோப்பா மற்றும் துபாய் போன்ற நாடுகளில் உயர்கல்வி வழங்கலை சொந்தமாகக் கொண்டு இயக்குவதாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, Study World Lanka Campus நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கருத்துவெளியிடுகையில்,

மால்டாவை தளமாகக் கொண்ட உயர்கல்விக்கான சிறந்த தனியார் நிறுவனங்களில் ஒன்றான குளோபல் கல்லூரி மால்டா, தரமான கல்வியை வழங்குவதில் 10வது ஆண்டு நிறைவை சிறப்பாக கொண்டாடுவதாக தெரிவித்தார். மேலும், மால்டாவின் குளோபல் கல்லூரி வழங்கும் அனைத்து படிப்புகளும் மால்டா மேலதிக மற்றும் உயர் கல்வி ஆணையகத்தால் அங்கிகரிக்கப்பட்டவையாகும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், உயர்கல்வி, இடம்பெயர்வு, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக உலகளவில் நன்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொழில்துறை ஒருங்கிணைந்த மேலாண்மை படிப்புகளுடன்கலாச்சார ரீதியாக பன்முகப்படுத்தப்பட்ட கல்லூரியாக திகழ்வதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

இதன் கட்டண விபரங்கள் குறித்து நோக்கும்போது, உடனடி பதிவுகளுக்கும் விசேட தள்ளுபடிகளுக்கும் ஸ்டடி வேர்ல்ட் லங்கா கேம்பஸ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை பார்வையிடுவதனூடாக அறிந்துகொள்ளமுடியும். அத்துடன், வழிகாட்டுதல்களானது, மாணவ ஆலோசகர்கள் மற்றும் Study World Lanka Campus இன் நிதித் துறையால் பொருத்தமான நேரத்தில் வழங்கப்படும்.

இங்கு, BA Management, BA Marketing, BA Management With Human Resources, BA  Management With Psychology, BA Tourism and EventsManagement, BA Accounting and Finance  போன்ற கற்கைகளை தொடரமுடியும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், Study World Lanka Campusசெயல்பாட்டுத் தலைவர் பாலாஜி ஜெகதீஸன், சந்தைப்படுத்தல் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் பென்ஸ்டன் அலெக்ஸ், மேலாளர் சந்திரகலா ஸ்ரீரமணா, நிறுவன உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர்...

2026-09-15 16:50:10
news-image

கொட்டகலையில் விநாயகர் சிலைகள் கையளிப்பு

2026-09-15 10:54:59
news-image

மனையாவெளி திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஸ்ரீ வல்லபசக்தி...

2026-09-15 10:39:48
news-image

யோகக்கலை கற்கைநெறி நல்லூரில் ஆரம்பம்

2026-09-15 11:59:51
news-image

பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு...

2026-09-15 06:02:11
news-image

வவுனியா நகரில் இலக்கிய சந்திப்பு-2

2026-09-14 18:49:38
news-image

கொழும்பில் ‘EOLLLIM 2026’ கொரிய கலாசார...

2026-09-14 13:51:56
news-image

அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா:...

2026-09-13 17:20:18
news-image

கிண்ணியாவில் சர்வமதத் தலைவர்கள் பங்கேற்ற நபி...

2026-09-13 11:50:42
news-image

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா...

2026-09-13 10:50:11
news-image

கொழும்பில் ஒன்றுகூடும் யாழ். புனித பத்திரிசியார்...

2026-09-12 13:31:05
news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31