பாடசாலையில் 'ஏ' லெவல் கல்வியில் சித்தி அடைந்து உயர்கல்வி கற்பதற்காக கல்லூரிக்கு செல்லும் இளம் பெண்களுக்கும், அலுவலகத்தில் பணியாற்றும் இளம் பெண்கள் மற்றும் பெண்மணிகளுக்கும் அவர்களுடைய நாளாந்த வாழ்வியலுக்காக சூரிய ஒளியில் பயணிக்கும் போது பலருக்கு அவர்களுடைய தோல் பகுதியில் மாற்றம் ஏற்படும். சிலருக்கு மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் ஏற்படும் . இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
18 வயது முதல் 45 வயது வரையிலான பெண்களுக்கும், பெண்மணிகளுக்கும் தோல் வெடிப்பு, மூட்டுகளில் வலி அல்லது வீக்கம், கால் மற்றும் கண் பகுதியில் வீக்கம், அதீத சோர்வு, முடி உதிர்வு, வாய் அல்லது மூக்கு பகுதியில் ஏற்படும் புண், தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுக்கு மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் சிஸ்டமிக் லூபஸ் எரிதிமடோசஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும்.
ஆண் , பெண் என பாலின வேறுபாடு இன்றி, வயது வித்தியாசம் இன்றி யாருக்கு வேண்டுமானாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். அதேபோல் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையில் வெளிப்படும்.
வைத்தியர்கள் உங்களை பரிசோதனை செய்து எத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக அவதானிப்பர். இத்தகைய பாதிப்பு லூபஸ் நெஃப்ரிடிஸ், நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடிய லூபஸ், குழந்தை பருவத்தில் ஏற்படும் லூபஸ், ரிஃப்ராக்டரி லூபஸ் என பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படும்.
எம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாக ஆரோக்கியமான திசுக்களை எதிரியாக பாவித்து தாக்கும். சிலருக்கு இவை நாட்பட்ட தாக்குதலாக மாறும் அபாயமும் உண்டு. இதனால் தோல், மூட்டுகள், சிறுநீரகம், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளில் வீக்கத்தையும், பாதிப்பையும் உண்டாக்கி உயிருக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது.
சமச்சீரற்ற ஹோர்மோன் செயல்பாடு , மரபணு குறைபாடு , சுற்று புறச் சூழல் காரணிகள், நோய் தொற்றுகள்.. என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
குருதி பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, திசு பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பார்கள்.பரிசோதனைகளின் முடிவின் அடிப்படையில் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி இதற்கு நிவாரணம் வழங்குவர். இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்வதற்கான பரிந்துரைகளையும் வைத்தியர்கள் வழங்குவர்.
வைத்தியர் பிரசாந்த் குமார்
தொகுப்பு அனுஷா













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM