பாரிய போதைப்பொருள் வேட்டை: இருவர் கைது!

Published By: Digital Desk 1

30 Jan, 2026 | 08:38 AM
image

போதைப்பொருளுடன் உரகஸ்மன்ஹந்திய மற்றும் இரத்மலானை பகுதிகளில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, உரகஸ்மன்ஹந்திய - ஹீபன்கந்த பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (29) இரவு, உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால்; மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 102 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நவதகல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உரகஸ்மன்ஹந்திய பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்மலானை பகுதியில்  ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (29) மாலை, மொரட்டுவ பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்; மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 305 கிராம் 180 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 101 கிராம் 270 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ரத்மலானை பகுதியை சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அங்குலான கடற்பகுதியில் டோரா படகு விபத்து...

2026-08-15 14:22:51
news-image

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின்...

2026-08-15 14:30:14
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற மடு...

2026-08-15 13:41:43
news-image

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை...

2026-08-15 13:31:50
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள்...

2026-08-15 13:16:34
news-image

செம்மணி அகழ்வுகள் தமிழர் இனப்படுகொலையின் தீவிரத்தை...

2026-08-15 12:40:40
news-image

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானம் அதிகரிப்பு!

2026-08-15 12:21:55
news-image

சிறைச்சாலை அதிகாரிகளைக் கொலை செய்யச் சதி...

2026-08-15 12:04:11
news-image

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனே தலையிட வேண்டும்...

2026-08-15 11:15:42
news-image

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை...

2026-08-15 11:53:49
news-image

''செம்மணியில் எங்கள் கண்மணிகள்'' வடமாகாணம் முழுவதும்...

2026-08-15 10:59:09
news-image

சிலாபம் கரையில் கரை ஒதுங்கிய சந்தேகத்திற்கிடமான...

2026-08-15 11:16:30