வவுனியாவில் சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம், மரக்குற்றிகளை கைப்பற்றிய போதிலுமு் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ளதாக வவுனியா போதை பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் டி.எம்.எ.அனுர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

இன்று மதியம் 12 மணியளவில் வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பூந்தோட்டம் மகாரம்பைக்குளம் பகுதிக்கு சென்றபோது மரக்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் முதிரை மரக்குற்றிகள் ஏற்றிய வாகனத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

சட்டவிரோதமாக கடத்தபடவிருந்த 9முதிரை மரக் குற்றிகள், மகேந்திரா ரக வாகனம் என்பவற்றை கைப்பற்றியதாகவும்  இம் மரகுற்றிகளின் பெறுமதி ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபா பெறுமதி வாய்ந்ததென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தப்பிச் சென்ற நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் வவுனியா போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவின் சார்ஜன்ட் டி.எம்.எ.அனுர தெரிவித்ததுடன் இந்நடவடிக்கையில் பி.சி. ஜே.எம்.கீர்த்தி, ஆர்.எம்.கே.ஜி.பண்டார, எச்.எம்.டி.ஐ.குமார ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டதாகவும் தெரித்தார்.